- Home
- Gallery
- ரூ.10,000 கோடி சொத்து.. பணக்கார பாலிவுட் குடும்பம் இதுதான்.. ஆனா சோப்ரா, பச்சன் குடும்பம் இல்லை..
ரூ.10,000 கோடி சொத்து.. பணக்கார பாலிவுட் குடும்பம் இதுதான்.. ஆனா சோப்ரா, பச்சன் குடும்பம் இல்லை..
பாலிவுட்டின் பணக்கார குடும்பம் எது என்று உங்களுக்கு தெரியுமா? இதுகுறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Bollwood Richest Family
இந்தியாவின் கணிசமான அளவில் செல்வத்தை வைத்திருக்கும் பல சினிமா குடும்பங்கள் உள்ளன. குறிப்பாக பாலிட்டில், சோப்ராக்கள், கபூர்கள் மற்றும் பச்சன்கள் போன்ற முக்கிய திரைப்படக் குடும்பங்கள் பல தசாப்தங்களாக திரையுலகில் கொடிகட்டி பறந்து வருகின்றன. ஆனால் பாலிவுட்டின் பணக்கார குடும்பம் எது என்று உங்களுக்கு தெரியுமா? இதுகுறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
Bollwood Richest Family
பாலிவுட்டின் பணக்கார குடும்பம் T-Series நிறுவனத்தை நடத்தி வரும் பூஷன் குமார் குடும்பம் தான்.. T-Series நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பூஷன் குமார் இருக்கிறார். பூஷன் குமார் மற்றும் அவரது மாமா கிரிஷன் குமார் ஆகியோருக்கு சொந்தமானது தான் இந்த நிறுவனம். ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலின்படி, பூஷன் குமார் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு ரூ. 10,000 கோடி ஆகும்.
Bollwood Richest Family
1983 ஆம் ஆண்டில் பாலிவுட்டில் செல்வாக்கு மிக்க ஆளுமையாக இருந்த மறைந்த குல்ஷன் குமார் என்பவரால் T-Series நிறுவனம் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் கயாமத் சே கயாமத் தக் என்ற படத்தின் பாடல்களின் வெற்றி தொடங்கி பல ஹிட் ஆல்பங்களை வழங்கி உள்ளது.
Bhushan Kumar
T-Series தற்போது இந்தியாவின் மிகப்பெரிய பிராண்ட் நிறுவனமாக உள்ளது. பூல் புலையா 2 மற்றும் தூ ஜூதி மைன் மக்கார் போன்ற சமீபத்திய வெற்றிகளுடன் திரைப்பட தயாரிப்பு நிறுவனமாகவும் இந்த நிறுவனம் வெற்றி பெற்றது. T-Series நிறுவனம் தயாரித்த பூல் புலையா 3 மற்றும் மெட்ரோ இன் டினோ ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ளன.
Chopra Family
யாஷ் ராஜ் ஃபிலிம்ஸைச் சொந்தமாக வைத்து நடத்தும் சோப்ராக்கள் பாலிலிவுட்டின் இரண்டாவது பணக்காரக் குடும்பம் - இதில் YRF தலைவர் ஆதித்யா சோப்ரா மற்றும் ராணி முகர்ஜி ஆகியோர் அடங்குவர். இந்த குடும்பத்தினரின் சொத்து மதிப்பு ரூ. 8,000 கோடி ஆகும்.
Bachchan Family
பாலிவுட் நடிகர்கள் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்ட அமிதாப் பச்சன் மற்றும் அவரின் குடும்பத்தினரின் நிகர சொத்து மதிப்பு ரூ. 4,500 கோடி, அதே சமயம் பாலிவுட் நடிகர்கள் கரீனா கபூர் கான், ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் உள்ளிட்ட கபூர்களின் சொத்து மதிப்பு ரூ. 2,000 கோடி என்று கூறுஅப்படுகிறது.