MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • World No Tobacco Day 2024 : புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்த சூப்பரான 5 டிப்ஸ் இதோ!

World No Tobacco Day 2024 : புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்த சூப்பரான 5 டிப்ஸ் இதோ!

நீங்கள் புகைபிடிப்பதை நிறுத்த விரும்புகிறீர்கள்.. ஆனால், முடியவில்லையா..? இன்றே இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றுங்கள். புகைபிடிப்பதை எளிதாக விட்டுவிடலாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : May 30 2024, 11:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

நாளை (மே.31) உலக புகையிலை எதிர்ப்பு தினம். புகைபிடித்தல் உடல் நலத்திற்கு கேடு, என்று அனைவருக்கும் தெரியும். ஏன் ஒவ்வொரு சிகரெட் பெட்டியிலும் கூட இது எழுதப்பட்டிருக்கும். இருந்த போதிலும், இதை கண்மூடித்தனமாக விரும்புகின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27

புகைபிடித்தால், நுரையீரல் பாதிப்பு, நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஆகியவை வரும். நீங்கள் புகையிலையிலிருந்து விலகி இருக்க விரும்பினால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில டிப்ஸ்களை மட்டும் பின்பற்றினால் போதும் அவை..

37

நீங்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட, நிகோடின் மாற்று சிகிச்சையின் உதவியை எடுத்துக் கொள்ளுங்கள். புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்த முதல் விஷயங்களில் இதுவும் ஒன்றாகும். இது உடலுக்கு சில நிகோடினை வழங்குகிறது. ஆனால் புகையிலை போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இல்லை. மேலும், இது பசியைக் குறைக்க உதவுகிறது. 

47

ஒவ்வொருவரும் சொந்த தூண்டுதல் காரணமாக தான் புகைபிடிக்கிறார்க. நீங்கள் புகைப்பிடிப்பதில் இருந்து விலகி இருக்க விரும்பினால், பார்ட்டிகளுக்குச் செல்வது, நீண்ட நேரம் ஃபோனில் பேசுவது அல்லது மன அழுத்தத்திற்கு ஆளாவது போன்றவற்றை முடிந்தவரை தவிர்க்கவும்.

57

புகைப்பிடிப்பதை நிறுத்த, தொடர்ந்து உடல் செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். உங்களுக்கென ஒரு வழக்கத்தை அமைத்து, சில உடல் செயல்பாடுகளைச் செய்யுங்கள். உதாரணமாக, ஓடுவது, நடப்பது அல்லது ஜிம்மிற்குச் செல்லவது. இதைச் செய்வதன் மூலம், புகையிலையின் மீதான உங்களின் நாட்டம் குறையும்.

இதையும் படிங்க:  டீன் ஏஜ் பெண்கள் புகைபிடிக்கும் பழக்கம் இருமடங்குக்கு மேல் உயர்வு! என்ன காரணம்?

67

புகையிலையின் மீதுள்ள ஏக்கத்தைப் பூர்த்தி செய்ய, ஒருநாளைக்கு ஒன்று தான் குடிப்பேன் என்று நீங்கள் முடிவெடுக்கலாம். ஆனால், இப்படி 
செய்வது உங்களை நீங்களே முட்டாளாக்குவது போன்றது. நீங்கள் ஒரு சிகரெட் புகைத்தால், அதிகமாக புகைக்க வேண்டும் என்ற ஆசை அதிகரிக்கும். எனவே, நீங்கள் சிகரெட் பிடிக்க நினைக்கும் போதெல்லாம், உங்களை ஆசையை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.

இதையும் படிங்க:  சிகரெட் பிடிச்சதால உதடு கருப்பா இருக்கா..? சிவப்பாக மாற சூப்பரான டிப்ஸ்!!

 

77

நீங்கள் புகையிலை பசியை எதிர்த்துப் போராட விரும்பினால், சில தளர்வு நுட்பங்களை பின்பற்றலாம். அதாவது, ஆழ்ந்த மூச்சுப் பயிற்சிகள் செய்வது , யோகா செய்வது, இசை கேட்பது அல்லது உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு செயல்களைச் செய்வது ஆகும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved