US Election | அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக 'கமலா ஹாரிஸ்' அதிகாரபூர்வ அறிவிப்பு!!
அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபரான கமலா ஹாரிஸ், இப்போது அவர் 2024 இல் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.
நாட்டின் முதல் பெண் மற்றும் முதல் கருப்பின துணை அதிபராக ஹாரிஸ் வரலாறு படைத்த கமலா ஹாரிஸ், இப்போது அவர் வெள்ளை மாளிகையின் தலைவராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பல முதல்வராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
கருப்பு நிறமுள்ள ஒரு பெண்ணாகவும், இரண்டு புலம்பெயர்ந்தோரின் மகளாகவும் இருக்கும், 59 வயதான கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்கியுள்ளார்.
ஜனநாயக கட்சி சார்பில் முதலில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். ஆனால், உட்கட்சியினரிடையே போதி ஆதரவு இல்லாததால் அவருக்கு எதிர்ப்புகள் வலுத்தன. தொடர்ந்து, ஜோ பைடன் அதிபர் தேர்தலில் இருந்து விலகினார். அவரே முன்மொழிந்த நிலையில் அடுத்த போட்டியாரளாக கமலா ஹாரிஸ் களமிறங்கினார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஓங்கும் கமலா ஹாரிசின் கை - முன்னாள் அதிபர் ஒபாமா ஆதரவு கரம்
பிரச்சாரத்தின் ஒருபகுதியாக தேர்தல் நிதி திரட்டிய கமலா ஹாரிஸ், ஒரே நாளால் அதிகபட்ச தொகையை வசூலித்து வரலாற்றுச் சாதனை படைத்தார். கட்சியினரும், தொழிலதிபர்களும் கோடி கோடியாக கொட்டிக்கொடுத்தனர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான அதிகாரபூர்வ ஆவணங்களில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம் அவர் அதிகாரபூர்வமாக ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக உறுதிபடுத்தப்பட்டுள்ளார்.
Kamala Harris: அமெரிக்க அதிபர் பதவியைக் குறிவைக்கும் கமலா ஹாரிஸ்! சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
US Election | வேட்பாளர் கமலா ஹாரிஸ்க்கு குவியும் நன்கொடை! ஒரே நாளில் குவிந்த 677.6 கோடி!