அமெரிக்க அதிபர் தேர்தலில் ஓங்கும் கமலா ஹாரிசின் கை - முன்னாள் அதிபர் ஒபாமா ஆதரவு கரம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்படலாம் என்று சொல்லப்படும் நிலையில், முன்னள் அதிபர் ஒபாமா கமலா ஹாரிஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
2024 நவம்பர் மாதத்தில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், தற்போதைய அதிபர் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்குவதாக அறிவித்துள்ளார். மேலும் தற்போது துணை அதிபராக உள்ள கமலா ஹாரிசை வேட்பாளராக நிறுத்த ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் உலகம் முழுவதும் கவனம் ஈர்க்கும் அரசியல் தலைவர்களில் ஒருவராக கமலா ஹாரிஸ் மாறியுள்ளார்.
இதன் மூலம் கமலா ஹாரிஸ் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயகக்கட்சி வேட்பாளராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கமலா ஹாரிஸ், டொனால்ட் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கமலா ஹாரிஸ்க்கு தற்போது ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “இந்த வார தொடக்கத்தில், நானும், எனது மனைவி மிச்செலும் எங்கள் நண்பர் கமலா ஹாரிஸை அழைத்து பேசினோம். அவர் அமெரிக்காவின் சிறந்த ஜனாதிபதியாக வருவார் என்று நாங்கள் நினைக்கிறோம். அவருக்கு எங்கள் முழு ஆதரவு இருப்பதாகவும் கூறினோம். நம் நாட்டிற்கு இந்த முக்கியமான தருணத்தில், நவம்பரில் அவர் வெற்றி பெறுவதை உறுதிப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்யப் போகிறோம். நீங்கள் எங்களுடன் இணைவீர்கள் என்று நம்புகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் ஒபாமா கமலா ஹாரிஸ்க்கு ஆதரவு அளிக்க மறுத்த நிலையில், தற்போது மீண்டும் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளதால் கமலா ஹாரிஸ்ன் கரம் ஓங்கி உள்ளதாக பார்க்கப்படுகிறது. மேலும் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரும் அவர் தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.