ட்ரம்பும் இல்ல, கமலா ஹாரிஸும் இல்ல.. அமெரிக்காவின் அடுத்த அதிபர் இவர் தான்.. பிரபல தீர்க்கதரிசி கணிப்பு..

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் - கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதை ஒரு தீர்க்கதரிசி கணித்துள்ளார். 

Who will be the next US President Mystic veg psychic predicts Rya

வரும் நவம்பர் 5-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் மீண்டும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். இந்த சூழலில் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஜோ பைடன் கடந்த வாரம் அறிவித்தார். மேலும் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு தனது முழு ஆதரவை வழங்குவதாகவும் கூறி உள்ளார்.

இதன் மூலம் கமலா ஹாரிஸ் இந்த ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் வேட்பாளராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கமலா ஹாரிஸ் - டொனால்ட் ட்ரம்ப் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மேலும் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெறுவாரா? அல்லது மீண்டும் டொண்டால் ட்ரம்ப் அதிபராவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Kamala Harris: அமெரிக்க அதிபர் பதவியைக் குறிவைக்கும் கமலா ஹாரிஸ்! சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இந்த நிலையில் அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதை ஒரு தீர்க்கதரிசி கணித்துள்ளார். ஆம். முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா தான் அடுத்த அதிபராக வாய்ப்பிருப்பதாக ஜெமிமா பேக்கிங்டன் என்ற தீர்க்கதரிசி கணித்துள்ளார். 2024 அதிபர் தேர்தலில் மிச்செல் ஒபாமா ஆர்வம் காட்டவில்லை என்றாலும் கூட அவர் தான் அடுத்த அதிபர் என்று அவர் கூறி உள்ளார். 

உலகின் ஒரே அஸ்பாரகஸ் ஜோதிட வல்லுநரான ஜெமிமா பேக்கிங்டன், டொனால்ட் டிரம்ப் அல்லது கமலா ஹாரிஸ் அடுத்த ஜனாதிபதியாக வரமாட்டார்கள் என்று கூறியுள்ளார். மிஸ்டிக் வெஜ் என்ற புனைப்பெயர் கொண்ட அவர் அஸ்பாரகஸ் என்ற செடியை தரையில் வீசுவாதல் உருவாகும் வடிவத்தை  கொண்டு உலக நிகழ்வுகளை கணிப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது அடுத்த அமெரிக்க அதிபர் யார் என்று கணித்த அவர் மிச்செல் ஒபாமா தான் அடுத்த அதிபர் எனவும் அவர் தேர்தலில் அதிபர் வேட்பாளராக போட்டியிடப் போகிறார் என்றும் கூறியுள்ளார். மேலும் குடியரசுக் கட்சி வேட்பாளர் இந்த முறை அமெரிக்க அதிபராக வருவதற்கு வாய்ப்பில்லை என்றும் அவர் உறுதியாக கூறியுள்ளார். 

ஜெமிமா பேக்கிங்டன் பிரெக்ஸிட் மற்றும் எலிசபெத் ராணியின் மரணம் குறித்து துல்லியமாக கணித்துள்ளார். மேலும் ஜோ பைடன் அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதற்கு முன்பே, அமெரிக்கத் தேர்தலில் ஒரு பெண் வெற்றி பெறுவார் என்று கடந்த வாரம் அவர் கூறியது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது.

US Election | வேட்பாளர் கமலா ஹாரிஸ்க்கு குவியும் நன்கொடை! ஒரே நாளில் குவிந்த 677.6 கோடி!

இதனிடையே ஜோ பைடனை தேர்தலில் இருந்து விலக வைத்த ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் இன்னும் கமலா ஹாரிஸை ஆதரிக்கவில்லை என்பது சுவாரஸ்யமானது. அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, முன்னாள் ஹவுஸ் சபாநாயகர் நான்சி பெலோசி, செனட் பெரும்பான்மைத் தலைவர் சக் ஷூமர் மற்றும் ஹவுஸ் டெமாக்ரடிக் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ் ஆகியோர் இன்னும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

ஜோ பைடனை தேர்தலில் இருந்து விலக செய்த தலைவர்களில் முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா முக்கிய பங்கு வகித்தார். அதே நேரம் அவர் இன்னும் துணை அதிபர் கமலா ஹாரிஸை இன்னும் ஆதரவளிக்கவில்லை என்பதால் அவர் தனது மனைவி மிச்செலுக்கு ஆதரவு கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் இதற்கான விடை தெரியவரும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios