ரோவிங் போட்டியில் 4ஆவது இடம் பிடித்து காலிறுதி வாய்ப்பை இழந்த பால்ராஜ் பன்வார் – நாளை மேலும் ஒரு வாய்ப்பு!
பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரின் இன்று நடைபெற்ற ரோவிங் போட்டியில் இந்திய வீரர் பால்ராஜ் பன்வார் 7:07:11 நிமிடங்களில் இலக்கை கடந்து 4ஆவது இடம் பிடித்து காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரின் தொடக்க விழா நேற்று தொடங்கியது. செய்ன் நதிக்கரையில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில் கொட்டும் மழையிலும் நனைந்தபடி விளையாட்டு வீரர்கள் அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தினர். இதில், இந்தியா சார்பில் பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து மற்றும் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் இருவரும் இந்திய தேசிய கொடியை ஏந்தி அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தினர்.
மொத்தமாக 32 விளையாட்டுகளை கொண்ட இந்த பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் 329 போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்தியா சார்பில் 16 விளையாட்டுகளில் 117 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் தற்போது கலப்பு அணி 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் தற்போது நடைபெற்று முடிந்த ரோவிங் போட்டியில் இந்திய வீரர் பால்ராஜ் பன்வார் 7:07:11 நிமிடங்களில் இலக்கை கடந்து 4ஆவது இடம் பிடித்து தகுதி சுற்று வாய்ப்பை இழந்தார்.
Paris Olympics 2024 – ஜூலை 27, இந்தியா விளையாடும் போட்டிகள் என்னென்ன? முதல் பதக்கம் வெல்லுமா?
எனினும், தகுதிச் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் போட்டி நாளை நடைபெறுகிறது. நாளை நடைபெறும் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றால் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாதைச் சேர்ந்த மேகிண்டோஸ் 6:55.92 நிமிடங்களில் இலக்கை கடந்து காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். இதே போன்று கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்டெபனோஸ் ன்டோஸ்கோஸ் 7:01.79 நிமிடங்களிலும் அப்தெல்கலெக் எல்-பன்னா 7:05.06 வினாடிகளிலும் இலக்கை கடந்து காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர்.