MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • விஜய் டிவி 'ராஜா ராணி 2' சீரியல் ஹீரோ சிந்து ஹீரோவாக நடிக்கும் 'அகோரி'..! ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் டிவி 'ராஜா ராணி 2' சீரியல் ஹீரோ சிந்து ஹீரோவாக நடிக்கும் 'அகோரி'..! ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தொலைக்காட்சித் தொடர்களில் கதாநாயகனாக நடித்து கவனம் பெற்ற, சீரியல் நடிகர் சித்து ஹீரோவாக நடிக்கும் 'அகோரி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Dec 10 2023, 04:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் இல்லம் தேடி மக்கள் மனதில் அமர்ந்திருக்கும் ஒரு நடிகராக வளர்ந்திருப்பவர் சித்து. இவர்  நடித்த திருமணம், ராஜா ராணி போன்ற தொடர்கள் மிகவும் புகழ் பெற்றவை. இவர் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'அகோரி'. இதுவரை சின்னத்திரை மூலம் தனது திறமையை வெளிப்படுத்திய இவர், பெரிய திரை உலகில் காலடி எடுத்து வைத்துள்ளதால், தான் அறிமுகம் ஆகியுள்ள இந்தப் படத்தைப் பெரிதும் நம்பி யிருக்கிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

'பாரதி' படத்தின் மூலம் பாரதியாகவே மக்கள் மனதில் அழுத்தமாக இடம் பிடித்த சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பிலும் 'அகோரி 'என்கிற படம் உருவாகியிருக்கிறது. இவர்களைப் போலவே தங்களது நடிப்பின் மூலம் முந்தைய படங்களின் வழியாகச் சிறந்த நடிப்புக் கலைஞர்களாகத் தடம் பதித்த குணச்சித்திர நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர்.

7 முதல் 10 நாட்கள் காட்டுக்குள்.. நிர்வாணமாக வாழும் விஜய் - சூர்யா பட நடிகர்! அவரே வெளியிட்ட Nude போட்டோஸ்!

35

மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனன்   தயாரித்திருக்கிறார். படத்தை இயக்கியிருப்பவர் அறிமுக இயக்குநர் D.S. ராஜ்குமார் .சிவனடியாராக உள்ள ஓர் அகோரிக்கும் தீய சக்திகளுக்கும்  நடக்கும்  போராட்டமே கதை. இது ஒரு முழுமையான பொழுதுபோக்குப் படம் . ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து வயதினருக்குமான  வணிக அம்சங்கள் படத்தில் இருக்கும் படி உருவாகியிருக்கிறது.

45

படமாக்கப்பட்டன. படத்தில் இடம்பெறும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் கண்களை மிரளவைக்கும்படி இருக்கும்.தெலுங்கில் 'சஹா 'படத்தின் மூலம்  புகழ் பெற்ற ஜக்குல்லா பாபு தமிழில் வில்லனாக இப்படத்தில் வருகிறார். இவரது உயரம் 6.5 " ஆகும். நாயகியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடித்திருக்கிறார். இவர் கர்நாடக மாநில அரசின் விருது பெற்றவர்.

46 வயதில்.. சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து கரம் பிடித்த காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி! குவியும் வாழ்த்து!

55

இவர்களுடன் மைம் கோபி,  டார்லிங் மதனகோபால், ரியாமிகா, மாதவி, வெற்றி,கார்த்தி, 'கலக்கப்போவது யாரு' சரத், டிசைனர் பவன் ஆகியோரும் நடித்துள்ளனர். கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற புதிய கலைஞர்களும் இப்படத்தில்  நடித்திருக்கிறார்கள். 'அகோரி' படம் பார்த்த சென்சார் அதிகாரிகள் நல்ல பொழுதுபோக்குடன் அமைந்த திகில் கதையாக இருக்கிறது என்று பாராட்டி உள்ளனர். குழந்தைகள் பெரியவர்களுடன் பார்க்கும்படியாக இருப்பதால் யூ / ஏ சான்றிதழ் கொடுத்துள்ளார்கள். இப்படத்தைத் திரையரங்குகளில் PVR சினிமாஸ் வெளியிடுகிறது. பிரம்மாண்டமான பல வெற்றிப் படங்களை வெளியிட்ட பி விஆர் சினிமாஸ் இப்படத்தை வெளியிடுவதில் இருந்து படத்தின் நம்பகத்தன்மையும் வணிக மதிப்பும் அதிகரித்துள்ளன.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் தொலைக்காட்சி
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved