மாஸ் ஹிட் அடித்த மகாராஜா படத்திற்காக மிகவும் கம்மி சம்பளம் வாங்கிய விஜய் சேதுபதி - அதுவும் இவ்வளவு தானா?
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது 50வது படமான மகாராஜாவில் நடிக்க எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்கிற விவரம் இணையத்தில் கசிந்துள்ளது.
Vijay Sethupathi
கோலிவுட்டின் வெர்சடைல் ஆக்டராக திகழ்ந்து வருபவர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என எது கொடுத்தாலும் அதில் சிறப்பாக நடித்து அப்ளாஸ் வாங்கி விடுவார் மக்கள் செல்வன். அவர் நடிப்பில் அண்மையில் திரைக்கு வந்த படம் மகாராஜா. இப்படத்தை நித்திலன் இயக்கி இருக்கிறார். இது விஜய் சேதுபதியின் 50வது படமாகும். இப்படத்தில் விஜய் சேதுபதி உடன் அனுராக் கஷ்யப், நட்ராஜ், மம்தா மோகன் தாஸ், அபிராமி என அனுபவம் வாய்ந்த நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.
Makkal Selvan Vijay Sethupathi
மகாராஜா திரைப்படத்திற்கு விமர்சன ரீதியாக அமோக வரவேற்பு கிடைத்ததை அடுத்து அப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பி வருகிறது. அப்படம் ரிலீஸ் ஆன நான்கே நாட்களில் ரூ.40 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து மாஸ் காட்டி இருக்கிறது. விரைவில் 50 கோடியை எட்டிவிடும் என்பதால் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து அதிக வசூல் ஈட்டிய காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் வசூல் சாதனையையும் மகாராஜா விரைவில் முறியடிக்க வாய்ப்புள்ளது.
இதையும் படியுங்கள்... அடேங்கப்பா... நடிகை காஜல் அகர்வால் இத்தனை கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரியா? வியக்க வைக்கும் Net Worth இதோ
Vijay Sethupathi 50th Movie Maharaja
தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களிலும் மகாராஜா திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆன இப்படம், இந்த ஆண்டு அங்கு அதிக வசூல் செய்த தமிழ் படம் என்கிற சாதனையை படைத்துள்ளது. மகாராஜா படம் மூலம் நடிகர் விஜய் சேதுபதிக்கு மார்க்கெட் எகிறினாலும் அப்படத்திற்காக அவர் கம்மி சம்பளம் தான் வாங்கினாராம்.
Vijay Sethupathi Salary for Maharaja
அந்த வகையில் மகாராஜா படத்தில் ஹீரோவாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதி ரூ.20 கோடி மட்டுமே சம்பளமாக வாங்கினாராம். ஜவான் படத்தில் வில்லனாக நடிப்பதற்கே ரூ.25 கோடி வரை சம்பளம் வாங்கிய விஜய் சேதுபதி, மகாராஜா படத்துக்காக அதைவிட கம்மி சம்பளம் வாங்கி உள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அண்மையில் மகாராஜா பட புரமோஷனில் பேசும்போது கூட, தான் பல படங்களுக்கு அட்வான்ஸ் தவிர வேறு எதுவும் வாங்காமல் நடித்து கொடுத்ததாக கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... வெறித்தன விஜய்சேதுபதி Is back - 2024ல் தெலுங்கு மாநிலத்தில் அதிக வசூல் செய்த மகாராஜா! எத்தனை கோடி தெரியுமா?