உங்க துணைக்கு இந்த ஒரு விஷயம் தெரியாமல் பார்த்துக்கோங்க!! தெரிஞ்சா உங்க நிலைமை அவ்ளோதான்
நம் துணைக்கு நம்மை குறித்து தெரிய கூடாத விஷயங்கள் என சில உள்ளன. அது குறித்து இங்கு காணலாம்.

பொதுவாக நாம் விரும்பும் நபர்களிடம் ஒளிவு மறைவு இல்லாமல் இருக்கவேண்டும் என்பார்கள். அதிலும் கணவன் மனைவி என்றால் வெளிப்படைத்தன்மை மிகவும் அவசியம். அப்படியில்லாமல் போனால் இருவருக்குள்ளும் மோசமான பிரச்சினைகள் தலைதூக்கும். அந்த வகையில் உங்கள் பார்டனரிடம் செய்ய கூடாத சில விஷயங்களை இங்கு காணலாம்.
கடந்தகாலம்: உங்களுடைய கடந்தகாலம் குறித்து துணையிடம் முன்பே பேசிவிடுவது நல்லது. மிகவும் டீடெய்ல்லாக பேசாவிட்டாலும் குறைந்தபட்சம் உண்மையான தகவல்களை சொல்ல முயற்சி செய்யுங்கள். ஆனாலும் அதை ஒருமுறை சொல்வதோடு நிறுத்தி கொள்ளவேண்டும். மீண்டும் மீண்டும் அதுகுறித்து உரையாடக் கூடாது. உங்கள் கடந்தகாலத்தை நினைவுபடுத்தும் செயல்களை ஒருபோதும் செய்யாதீர்கள்.
குறிப்பு: ஒருவேளை உங்கள் மனைவி அல்லது கணவன் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் அதை குறித்து பேசாமல் இருப்பது நல்லது. மேலும் உங்கள் துணை கடந்தகாலம் குறித்து பேச விரும்பவில்லை என்றால் கட்டாயப்படுத்தி கேட்காதீர்கள்.
வாக்குறுதி: உங்களால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை செய்யாதீர்கள். பொய் வாக்குறுதிகள் உங்கள் மீதான நம்பிக்கையை குலைக்கும். நீங்கள் உங்கள் துணைக்கு நம்பிக்கையானவராக இருப்பது மிகவும் அவசியம். ஒருவேளை நீங்கள் வாயில் வடை சுடுபவர் என உங்கள் மனைவியோ கணவனோ அறிந்தால் உங்கள் மீதான மதிப்பு குறைந்துவிடும்.
உண்மைத்தன்மை: எப்போதும் பொய் சொல்பவராக இருக்காதீர்கள். முக்கியமான விஷயங்களில் உண்மையை பேசி பழகுங்கள். மோசமான முறையில் அந்த உண்மை வெளிவருவதை காட்டிலும் நீங்களே அதை சொல்லிவிடுவது உங்கள் மீதான நன்மதிப்பை ஏற்படுத்தும். மூன்றாம் நபர் உங்களை காட்டி கொடுக்க இடம் கொடுக்காதீர்கள். அப்படியில்லை என்றால் உங்களை அவர்கள் துளியும் நம்பமாட்டார்கள்.
இதையும் படிங்க: Signs of True Love : ஒருவர் நம்மை உண்மையாக நேசிக்குறாங்கனு எப்படி தெரிஞ்சுக்கணும் தெரியுமா?!
ரகசியங்கள் ஜாக்கிரதை: உங்கள் இருவருக்கும் இடையேயான அந்தரங்க விஷயங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்கள் நண்பர்கள் உங்களுக்கு நெருக்கமாக இருந்தாலும் உங்கள் மனைவிக்கு/ கணவருக்கு அந்நியமானவர்கள். அவர்களிடம் உங்களின் அந்தரங்கத்தை பகிராதீர்கள். இது குறித்து உங்கள் துணைக்கு தெரிய வந்தால் உங்கள் உறவு பாதிக்கும்.
இதையும் படிங்க: Extra Marital Affairs : கள்ள உறவுக்கு இப்படியுமா காரணங்கள் இருக்கு..?
உடலுறவில் கவனம்: மனைவிக்கு விருப்பம் இல்லாத சமயம் அவர்களை உடலுறவுக்கு அழைத்து கொடுமை செய்யாதீர்கள். இந்த மாதிரியான விஷயங்களில் புரிதல் அவசியம். மாதவிடாய் காலங்களில் அவர்களுக்கு அன்பும் ஆதரவும் அளிப்பது அவசியம். இந்த விஷயத்தில் உங்களுக்கு புரிதல் இல்லையென்றால் உறவில் கசப்பு வரும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D