- Home
- Gallery
- அடேங்கப்பா... நடிகை காஜல் அகர்வால் இத்தனை கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரியா? வியக்க வைக்கும் Net Worth இதோ
அடேங்கப்பா... நடிகை காஜல் அகர்வால் இத்தனை கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரியா? வியக்க வைக்கும் Net Worth இதோ
Kajal Aggarwal Net Worth : தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.

kajal aggarwal
பேரரசு இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு வெளிவந்த பழனி படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானவர் காஜல் அகர்வால். இதையடுத்து பொம்மலாட்டம், மோதி விளையாடு போன்ற படங்களில் நடித்த அவருக்கு ராஜமவுலி இயக்கிய மகதீரா திரைப்படம் தான் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
Kajal Aggarwal Photos
அப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடித்திருந்தார் காஜல். அப்படத்துக்கு தமிழ்நாட்டிலும் அமோக வரவேற்பு கிடைத்தது. மகதீரா படத்துக்கு பின்னர் தமிழில் பிசியான நடிகையாக உருவெடுத்த காஜல், கார்த்திக்கு ஜோடியாக நான் மகான் அல்ல, சூர்யாவுடன் மாற்றான், விஜய்க்கு ஜோடியாக துப்பாக்கி மற்றும் ஜில்லா, அஜித்துடன் விவேகம், தனுஷுக்கு ஜோடியாக மாரி என தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து டாப் ஹீரோயினாக உயர்ந்தார்.
kajal aggarwal Birthday
தமிழைப் போல் நடிகை காஜல் அகர்வாலுக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் இருந்து வந்தது. அங்கும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இதனிடையே கடந்த 2020-ம் ஆண்டு நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய நீண்ட நாள் காதலனான கவுதம் கிச்சிலு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு கடந்த 2022ம் ஆண்டு நீல் கிச்சிலு என்கிற ஆண் குழந்தை பிறந்தது.
kajal aggarwal salary
மகன் பிறந்த பின்னர் சினிமாவில் மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்த காஜல், ஹே சினாமிகா, கோஸ்டி போன்ற படங்களில் நடித்தார். தற்போது காஜல் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்தியன் 2 திரைப்படம் வருகிற ஜூலை 12ந் தேதி திரைக்கு வர உள்ளது.
இதையும் படியுங்கள்... Srushti : அட ஸ்ருஷ்டி டாங்கேவா இது.. கிழித்துவிட்ட மொசு மொசு ஆடையில்.. இளசுகளை கவரும் போஸ் - ஹாட் பிக்ஸ்!
kajal aggarwal Assets
அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் காஜலின் மார்க்கெட் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் இன்று தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர் ரசிகர்கள்.
kajal aggarwal Net Worth
நடிகை காஜல் அகர்வாலின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி அவருக்கு ரூ.90 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. நடிகை காஜல் அகர்வால் ஒரு படத்துக்கு ரூ.2 முதல் ரூ.4 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.
kajal aggarwal Car Collection
நடிகை காஜல் அகர்வாலுக்கு சொந்தமாக மும்பையில் ரூ.6 கோடி மதிப்பில் சொகுசு பங்களா ஒன்று உள்ளது. இதுதவிர அவரிடம் ஆடி ஏ4, ரேஞ்ச் ரோவர், ஸ்கோடா ஆக்டேவியா போன்ற விலையுயர்ந்த கார்களும் இருக்கின்றன. சினிமா தாண்டி காஜல் அகர்வாலுக்கு சொந்தமாக அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றும் உள்ளது. அதன் மூலமும் நல்ல வருமானம் ஈட்டி வருகிறார் காஜல்.
இதையும் படியுங்கள்... Vijay : சினிமாவை விட்டு விலகும் விஜய்.. "அதனால் கலைக்கு பாதிப்பு ஒன்றும் இல்லை" - ஓப்பனாக பேசிய நடிகை கஸ்தூரி!