நடு ராத்தியில் உதவிய மறக்க முடியாத நபர்..! கண் கலங்க வைத்த பாசம்.. வெற்றிமாறன் கூறிய நெகிழ்ச்சி சம்பவம்!
இயக்குனர் வெற்றிமாறன் தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நபர் குறித்த தகவலை சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
Vetrimaaran
தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் இருந்தாலும், ஒரு சில இயக்குனர்களுக்கு இருக்கும் இடத்தை யாராலும் பூர்த்தி செய்து விட முடியாது. அப்படிப்பட்ட இயக்குனர்களில் ஒருவர் தான் வெற்றிமாறன். இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக இருந்த இவர், எண்ணிக்கையில் மிகவும் குறைவான படங்கள் மட்டுமே இயக்கி இருந்தாலும், ஒவ்வொரு திரைப்படமும் இவருடைய பெயரை சொல்லும் அளவில் உள்ளது.
Director Vetrimaran
நடிகர் தனுஷை வைத்து இயக்கிய 'பொல்லாதவன்' படத்தின் மூலம் 2007 ஆம் ஆண்டு இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். தன்னுடைய முதல் படத்திலேயே சிறந்த அறிமுக இயக்குனருக்கான சில விருதுகளை வென்ற இவர், இதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக நடிகர் தனுஷ் உடன் கை கோர்த்த 'ஆடுகளம்' திரைப்படம், தேசிய விருது திரைப்படமாக மாறியது. சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த ஸ்கிரீன் ப்ளே என இரண்டு தேசிய விருதுகளை வாங்கியது மட்டும் இன்றி, ஃபிலிம் ஃபார் விருது, சைமா விருது உள்ளிட்ட பல விருதுகளை வாரி குவித்தது.
ஒரு இயக்குனராக மட்டுமின்றி, கதாசிரியராகவும்.. தயாரிப்பாளராகவும்.. மாறிய சிறப்பான படங்களை தேர்வு செய்து பணியாற்றி வரும் வெற்றிமாறன், நடிகர் சூரியை கதாநாயகனாக வைத்து இயக்கிய விடுதலை படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த அபரிவிதமான வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது பாகம் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் கொடுத்த பேட்டியில் தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நபர் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். வெற்றிமாறன் கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது, தன்னுடைய நண்பருடன் சேர்ந்து ஒரு ஆவணப்படம் எடுப்பதற்காக திருக்கோவிலூர் சென்றுள்ளார். அந்த இடத்திற்கு செல்வதற்குள் நள்ளிரவு ஆகிவிட்டதாம். அது திருவிழா சமயம் என்பதால், லாட்ஜில் தங்க இடம் கிடைக்காமல் நண்பருடன், நடு ரோட்டில் நின்றுள்ளார்.
பிரதீப் வெளியேற்ற நடந்த சூழ்ச்சி.! தாழ்ப்பாள் மேட்டர்.. நான் குளிக்கும் போது? உண்மையை உடைத்த விச்சு!
அப்போது அந்த வழியாக வந்த முன்பின் தெரியாத நபர் ஒருவர், இவர்கள் இருவரையும் பார்த்து யார்? என்ன என்று விசாரித்துள்ளார். அப்போது இவர்கள் இருவரும் கல்லூரி மாணவர்கள் என்று தெரிந்ததும், சரி வந்து என்னுடைய ரூம்ல நைட்டு தங்கிக்கோங்க என, எந்த ஒரு பிரதிபலனையும் பார்க்காமல் உதவியுள்ளார்.
மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது அந்த அறையில் அவரை காணவில்லையாம். உடனே இருவரும் திடுக்கிட்டு போய் தங்களுடைய கேமரா உள்ளிட்ட பொருட்கள் இருக்கிறதா என்று சரி பார்த்துள்ளனர். அவர்கள் வைத்த பொருள் வைத்த இடத்தில் அப்படியே இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து அந்த முன்பின் தெரியாத நபர் கையில் இரண்டு சாப்பாடு பொட்டலத்துடன் உள்ளே வந்து, இந்தாங்க தம்பிகளா இதை சாப்பிடுங்க என்று கூறியுள்ளார்.
Vetrimaran
அதன் பின்... என்னோட தங்கச்சி சென்னையில் தான் படிக்குது. நான் இங்க உங்களுக்கு உதவுன மாதிரி என் தங்கச்சிக்கு யாராவது, அவ சிக்கலில் இருக்கும் போது உதவுவாங்க இல்லையா? என பாச பிணைப்புடன் பேசியுள்ளார். இந்த தகவலை வெற்றிமாறன் கூற... அந்த அண்ணனின் பாசம் கண் கலங்க செய்வதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.