MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Mutual Funds 2024 | நடப்பு ஆண்டின் சிறந்த மியூச்சுவல் ஃபண்டுகள்! இப்போதே முதலீடு செய்யுங்க, லாபத்த அள்ளுங்க!

Mutual Funds 2024 | நடப்பு ஆண்டின் சிறந்த மியூச்சுவல் ஃபண்டுகள்! இப்போதே முதலீடு செய்யுங்க, லாபத்த அள்ளுங்க!

மியூச்சுவல் ஃபண்டுகள் மூலதனச் சந்தைகளை மேம்படுத்துவதற்கும், ஈக்விட்டி, கடன் மற்றும் கலப்பின நிதிகளின் மாறும் வட்டி விகிதத்தை வழங்குவதற்கும் சிறந்த முதலீட்டு வழி என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருப்பினும், சரியான மியூச்சுவல் ஃபண்டுகளை கண்டறிவது ஒரு வைக்கோலில் ஊசியைத் தேடுவது போல் உணரலாம். இந்த 2024ம் ஆண்டியின் சிறந்த மியூச்சுவல் ஃபண்டுகள் இதோ... 

3 Min read
Dinesh TG
Published : Jul 27 2024, 09:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

மியூச்சுவல் ஃபண்டுகள் என்றால் என்ன?

மியூச்சுவல் ஃபண்ட் (பரஸ்பர நிதி திட்டங்கள்) என்பது முதலீட்டாளர்களிடமிருந்து நிதிகளை திரட்டி பங்குகள், பத்திரங்கள், அரசுப் பத்திரங்கள், தங்கம் மற்றும் பிற சொத்துக்களில் முதலீடு செய்யும் ஒருவகை திட்டமாகும். இதில் அதிக நிதிஇழப்பு அபாயம் இருக்காது.

2024 இல் இந்தியாவில் சிறந்த மியூச்சுவல் ஃபண்டுகள் (3Y ரிட்டர்ன்களின் படி)

இந்த தொகுப்பில் 3Y ரிட்டர்ன் (3 ஆண்டு வருடாந்திர) வருமானத்தின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள சிறந்த மியூச்சுவல் ஃபண்டுகள் உங்காளுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.
 

28

ஆதித்யா பிர்லா சன் லைஃப் PSU ஈக்விட்டி ஃபண்ட் நேரடி வளர்ச்சி (Aditya Birla Sun Life PSU Equity Fund Direct-Growth)

மார்ச் 31, 2024 நிலவரப்படி, இந்த நிதியானது ₹3,403.63 கோடி மதிப்புள்ள AUM ஐக் கொண்டுள்ளது, மேலும் செலவு விகிதம் 0.50%.

இது அதிக ரிஸ்க் வகை ஃபண்ட் ஆகும். இதில் ஈக்விட்டிகளில் அதிக அளவில் முதலீடு செய்யபடுகிறது. கணிசமான அளவு 57.47% லார்ஜ் கேப் பங்குகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து 16.97% மிட் கேப் பங்குகளிலும் 10.98% ஸ்மால் கேப் பங்குகளிலும் உள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் பரோடா, ஓஎன்ஜிசி, என்டிபிசி, கோல் இந்தியா லிமிடெட், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, கெயில் (இந்தியா), பெல் மற்றும் ஐஆர்இடிஏ ஆகியவற்றில் முதலீடு செய்துள்ளது.

ஜூலை 31 கடைசி தேதி.. நீட்டிப்பு கிடையாது.. வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பான முக்கிய அப்டேட்!
 

38

SBI PSU நேரடித் திட்டம்-வளர்ச்சி (SBI PSU Direct Plan-Growth)

மார்ச் 31, 2024 நிலவரப்படி, இதில் நிதியானது ₹1,875.84 கோடி மதிப்புள்ள AUM ஐக் கொண்டுள்ளது, மேலும் செலவு விகிதம் 0.92%.

முதலீடுகளில் 91.05% பங்குகளுக்கு ஒதுக்குகிறது, 39.26% லார்ஜ் கேப் பங்குகளிலும், 25.88% மிட் கேப் பங்குகளிலும் மற்றும் 17.91% ஸ்மார் கேப் பங்குகளிலும் உள்ளது.

NHPC, NTPC, Indian Bank, State Bank of India, Canara Bank, NMDC, Indian Oil Corporation, BHEL, Oil India, Hindustan Aeronautics, ONGC போன்றவற்றில் இந்த நிதி முதலீடு செய்யப்படுகிறது.

48

ஐசிஐசிஐ புருடென்ஷியல் இன்பராஸ்ட்ரக்சர் நேரடி வளர்ச்சி (ICICI Prudential Infrastructure Direct Growth)

மார்ச் 31, 2024 நிலவரப்படி, இந்த நிதியானது ₹5,186.46 கோடி மதிப்புள்ள AUMஐக் கொண்டுள்ளது, மேலும் செலவு விகிதம் 1.03% ஆகும்.

மொத்த முதலீடுகளில் 91.47% பங்குகளில் முதலீடு செய்கிறது, 43.17% லார்ஜ் கேப் பங்குகளிலும், 12.01% மிட் கேப் பங்குகளிலும், 15.43% ஸ்மார் கேப் பங்குகளிலும் முதலீடு செய்கிறது. கூடுதலாக, இது 0.92% கடன்களுக்கு ஒதுக்குகிறது.

நிதியின் பங்குகளில் NTPC, HDFC வங்கி, ICICI வங்கி, லார்சன் & டூப்ரோ லிமிடெட், இண்டர்குளோப் ஏவியேஷன் லிமிடெட், குஜராத் கேஸ் லிமிடெட், ஓபராய் ரியாலிட்டி லிமிடெட் மற்றும் பல உள்ளன.

58

HDFC இன்பராஸ்ட்ரக்சர் நேரடித் திட்டம்-வளர்ச்சி (HDFC Infrastructure Direct Plan-Growth)

மார்ச் 31, 2024 நிலவரப்படி, இந்த நிதியானது ₹1,663.37 கோடி மதிப்புள்ள AUMஐக் கொண்டுள்ளது. இதன் செலவு விகிதம் 1.24% ஆகும்.

மொத்த முதலீடுகளில் 85.78% உள்நாட்டு ஈக்குவிட்டிகளிலும், 32.83% லார்ஜ் கேப் பங்குகளிலும், 6.58% மிட் கேப் பங்குகளிலும், 27.04% ஸ்மார் கேப் பங்குகளிலும் முதலீடு செய்கிறது.

ரூ.4000 வரை சரிந்த தங்க விலை.. இதற்கு காரணம் மத்திய அரசே கிடையாது.. அப்போ யாரு தெரியுமா?

68
mutual funds

mutual funds

குவாண்ட் இன்பராஸ்ட்ரக்சர் Fund நேரடி-வளர்ச்சி (Quant Infrastructure Fund Direct-Growth)

மார்ச் 31, 2024 நிலவரப்படி, இந்த நிதியானது ₹2,498.18 கோடி மதிப்புள்ள AUMஐக் கொண்டுள்ளது, அதன் செலவு விகிதம் 0.73%.

முதலீடுகளில் 90.72% பங்குகளில் முதலீடு செய்கிறது, 25.78% லார்ஜ் கேப் பங்குகளிலும், 23.72% மிட் கேப் பங்குகளிலும், 23.56% ஸ்மால் கேப் பங்குகளிலும் மற்றும் 5.4% கடனிலும் செய்யப்படுகிறது.

அதன் பங்குகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா, அதானி பவர் லிமிடெட், டாடா பவர் கம்பெனி, ஸ்வான் எனர்ஜி மற்றும் கல்யாணி ஸ்டீல்ஸ் லிமிடெட் ஆகியவை அடங்கும்.

78

ஆதித்யா பிர்லா சன் லைஃப் நடுத்தர கால திட்டம் நேரடி வளர்ச்சி (Aditya Birla Sun Life Medium Term Plan Direct-Growth)

மார்ச் 31, 2024 நிலவரப்படி, இந்த நிதியானது ₹1,863.18 கோடி மதிப்புள்ள AUM ஐக் கொண்டுள்ளது, அதன் செலவு விகிதம் 0.85%.

அதன் நிதியானது 93.98% கடனில் முதலீடு செய்கிறது, 46.21% அரசாங்கப் பத்திரங்களுக்கும் 44.01% குறைந்த ஆபத்துள்ள பத்திரங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

உங்கள் பேங்க் அக்கவுண்டில் இருந்து ரூ.295 காணாம போகுதா? அதற்கு இதுதான் காரணம்!

GOI, வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி, பெல்ஸ்டார் மைக்ரோ ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட், ஜேஎம் பைனான்சியல் கிரெடிட் சொல்யூஷன்ஸ் லிமிடெட், எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட், அவான்ஸ் ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் போன்றவற்றில் முதலீடுகள் செய்யப்படுகின்றன.

88

Disclaimer

மியூச்சுவல் ஃபண்டுகளும் நிதி இழப்பு அபாயம் கொண்டவை. மேற்காணும மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய நினைத்தால் உங்கள் தனிப்பட்ட சிந்தனையின் கீழ் முதலீடு செய்யுங்கள். மேலும் தவல்களுக்கு ஒரு சிறந்த மியூச்சுவல் ஃபண்டு ஆலோசகரை அணுகுங்கள்.

About the Author

DT
Dinesh TG
முதலீடு
வணிகம்
மியூச்சுவல் ஃபண்டுகள்
சிறந்த பரஸ்பர நிதிகள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved