"நானும் வேலூர்காரன்தாண்டா.." வாணி ஜெயராம் முதல் நெல்சன் வரை - வேலூர் மண்ணை பெருமைகொள்ள வைத்த Celebrities!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சினிமா கனவோடு சென்னை நோக்கி வந்த பலர் இன்று வெள்ளித்திரையில் மின்னும் நட்சத்திரங்களாக ஜொலித்து வருகின்றனர். பொதுவாக மதுரையில் இருந்து தான் அதிக அளவிலான நடிகர்கள் நடிப்புத் துறைக்கு வருவதாக கூறுவதை நாம் கேட்டிருப்போம், ஆனால் வேலூரில் இருந்தும் பல கலைஞர்கள் வெள்ளித்தறையில் மின்னிக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?
Vani Jayaram
பழம்பெரும் பாடகியான பத்மபூஷன் வாணி ஜெயராம் அவர்கள் வேலூரில் பிறந்தவர் தான். "நவீன இந்தியாவின் மீரா" என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் வாணி ஜெயராம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய திரையுகளின் மிகசிறந்த பாடகியாக திகழ்ந்தார். இந்த 2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட பல சோகமான நிகழ்வுகளில் வாணி ஜெயராம் அவர்களுடைய மறைவும் ஒன்று.
Radhika Apte
பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என்று மிகவும் பிஸியாக நடித்து வரும் ஒரு நடிகை தான் ராதிகா ஆப்தே. இவர் தமிழில் நடித்த திரைப்படங்கள் வெகு சில என்றாலும் இவர் சொந்த ஊர் வேலூர் தான். கடந்த 2012 ஆம் ஆண்டு லண்டன் நகரை சேர்ந்த வயலின் இசை கலைஞர் பெனிடிக் டெய்லர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ராதிகா ஆப்தே.
Indhuja Ravichandran
வேலூரில் பிறந்து அங்கேயே தனது பட்டப்படிப்பை முடித்து, கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான "மேயாத மான்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் திரையுலக பிரவேசம் அடைந்த நடிகை தான் இந்துஜா ரவிச்சந்திரன். இந்த ஆறு ஆண்டுகளில் இவர் நடித்த திரைப்படங்கள் குறைவானது என்றாலும், தன்னுடைய கதாபாத்திரம் நல்ல முறையில் பேசப்படும்படி நடிக்கும் ஒரு நல்ல கலைஞர் இந்துஜா.
Nelson Dilipkumar
இந்திய சினிமா உலகில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்துவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குவது என்பது பல பொறுப்புகளை கொண்ட ஒரு கடினமாக செயலாகும். ஆனால் அதை அண்மையில் நேர்த்தியாக செய்து, மக்கள் மத்தியிலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டை பெற்று வரும் இயக்குனர் தான் நெல்சன் திலீப்குமார், இவரும் பிறந்தது வேலூரில் தான்.