மார்க் ஆண்டனியில் மாஸ் காட்டிய எஸ்.ஜே.சூர்யாவுக்கு இப்படி ஒரு மனநோய் இருக்கிறதா? பயில்வான் சொன்ன பகீர் தகவல்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக கலக்கி வரும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஒரு மனநோய் இருப்பதாக பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கிறார்.
SJ Suryah
தமிழ் திரையுலகில் அஜித்தின் வாலி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. இதையடுத்து விஜய்யை வைத்து குஷி என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்த இவர், பின்னர் தானே ஹீரோவாகவும் நடிக்கத்தொடங்கினார். இவர் முதன்முதலில் ஹீரோவாக நடித்த நியூ, அன்பே ஆருயிரே ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இதனால் படம் இயக்குவதை ஓரங்கட்டிவிட்டு முழுநேர நடிகராக களமிறங்கினார் எஸ்.ஜே.சூர்யா.
Actor SJ Suryah
ஹீரோவாக மட்டும் நடித்து வந்த எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஒரு தரமான வில்லனும் ஒளிந்திருக்கிறார் என்பதை வெளிச்சம்போட்டு காட்டிய திரைப்படம் தான் ஸ்பைடர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படத்தில் சுடலை என்கிற கொடூர வில்லனாக மிரட்டி இருந்தார் எஸ்.ஜே.சூர்யா. இதையடுத்து அவருக்கு வில்லன் வாய்ப்புகள் குவியத் தொடங்கின. விஜய்க்கு வில்லனாக மெர்சல், சிம்புவுக்கு வில்லனாக மாநாடு, சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக டான் போன்ற படங்களில் நடித்து அசத்தினார்.
இதையும் படியுங்கள்... அசோக் செல்வனை விட பல மடங்கு வசதி படைத்த கீர்த்தி பாண்டியன்! அருண் பாண்டியன் Net Worth இத்தனை கோடியா?
mark antony sj suryah
அண்மையில் விஷாலுக்கு வில்லனாக இவர் நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் மாஸ் ஹிட் அடித்துள்ளது. இப்படத்தில் ஜாக்கி பாண்டியன், மதன் பாண்டியன் என இரு வேடங்களில் அதகளம் செய்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. தொடர்ந்து அவருக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அடுத்ததாக இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.
SJ suryah OCD problem
இந்த நிலையில், எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஒரு மனநோய் இருப்பதாக சர்ச்சைக்குரிய சினிமா பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கிறார். ஓசிடி எனும் மனநோயால் எஸ்.ஜே.சூர்யா பாதிக்கப்பட்டுள்ளார். இதை நான் சொல்லவில்லை நடிகர் விஷாலே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் யாரிடமாவது சிரித்து பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென கத்திவிடுவாராம் எஸ்.ஜே.சூர்யா. இவ்வாறு பயில்வான் கூறினார். எண்ணப் பிறழ்வு நோய் எனப்படும் இந்த ஓசிடி பிரச்சனையால் எஸ்.ஜே.சூர்யா பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்த ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... மார்க் ஆண்டனியில் ‘மதன் பாண்டியன்’ ஆக எஸ்.ஜே.சூர்யாவுக்கு பதில் நடிக்க இருந்தது இந்த பாலிவுட் நடிகரா?