மார்க் ஆண்டனியில் ‘மதன் பாண்டியன்’ ஆக எஸ்.ஜே.சூர்யாவுக்கு பதில் நடிக்க இருந்தது இந்த பாலிவுட் நடிகரா?
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வரும் மார்க் ஆண்டனி படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு பதிலாக நடிக்க இருந்த நடிகர் பற்றி தற்போது பார்க்கலாம்.
SJ Suryah
திரிஷா இல்லேனா நயன்தாரா படம் மூலம் அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். இதையடுத்து இவர் இயக்கிய அன்பானவன் அடங்காதவன் அசராதவன், பஹீரா ஆகிய திரைப்படங்கள் தோல்வியை சந்தித்ததால் துவண்டு இருந்த ஆதிக் ரவிச்சந்திரனிடம் பெரிய நடிகர்களை வைத்து படம் செய்யுமாறு நடிகர் அஜித் ஊக்கம் அளித்துள்ளார். இதையடுத்து தான் மார்க் ஆண்டனி படம் மூலம் விஷால் உடன் கூட்டணி அமைத்தார் ஆதிக் ரவிச்சந்திரன்.
mark antony
இப்படத்தை மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் தயாரித்திருந்தார். ரூ.60 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரான இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், அபிநயா, ரெடின் கிங்ஸ்லி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். டிரைலர் ரிலீஸ் ஆனபோதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியது.
இதையும் படியுங்கள்... பிரியா பவானி சங்கர் வாழ்க்கையில் நடந்த சோகம்... தன் தாய்க்கு ஏற்பட்ட பாதிப்பால் கண்கலங்கிய நாயகி
mark antony movie SJ Suryah
இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த செப்டம்பர் 15-ந் தேதி திரைக்கு வந்த மார்க் ஆண்டனி திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியான முதல் 4 நாட்களிலேயே 50 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்தது. தொடர்ந்து வெற்றிநடை போட்டு வருவதால், நடிகர் விஷாலின் கெரியரில் முதன்முறையாக ரூ.100 கோடி வசூலை வாரிக்குவித்த படமாக மார்க் ஆண்டனி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Anurag kashyap
மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது நடிகர் எஸ்.ஜே,சூர்யாவின் நடிப்பு. அவர் நடித்த ஜாக்கி பாண்டியன், மதன் பாண்டியன் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இதில் ஜாக்கி பாண்டியன் கேரக்டருக்கு மட்டும் தான் எஸ்.ஜே.சூர்யாவை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்த ஆதிக், மதன் பாண்டியன் கேரக்டரில் பாலிவுட் நடிகர் அனுராக் கஷ்யப்பை நடிக்க வைக்க முடிவு செய்திருந்தாராம். ஆனால் எஸ்.ஜே.சூர்யா கதை கேட்டதும் தானே மதன் பாண்டியனாக நடிக்க விருப்பம் தெரிவித்தவுடன் அவருக்கு ஏற்றவாறு அந்த கேரக்டரை சற்று மாற்றி படத்தில் வைத்திருக்கிறார் ஆதிக். அவர் எதிர்பார்த்ததைவிட மதன் பாண்டியன் கேரக்டரில் எஸ்.ஜே.சூர்யா பின்னி பெடலெடுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... இதுக்கு டவல் கட்டிக்கிட்டு போஸ் கொடுத்திருக்கலாம்! எல்லை மீறிய கவர்ச்சியில்.. ஸ்ரீதேவி மகள் ஜான்வி! போட்டோஸ் !