MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அசோக் செல்வனை விட பல மடங்கு வசதி படைத்த கீர்த்தி பாண்டியன்! அருண் பாண்டியன் Net Worth இத்தனை கோடியா?

அசோக் செல்வனை விட பல மடங்கு வசதி படைத்த கீர்த்தி பாண்டியன்! அருண் பாண்டியன் Net Worth இத்தனை கோடியா?

நடிகரும், தயாரிப்பாளருமான, அருண் பாண்டியன் மகளை காதலித்து கரம் பிடித்துள்ள அசோக் செல்வனின் மனைவி கீர்த்தி பாண்டியன் தந்தையின் சொத்து மதிப்பு மற்றும் அசோக் செல்வனின் சொத்து மதிப்பு குறித்து இந்த பதிவில் பார்ப்போம். 

2 Min read
manimegalai a
Published : Sep 22 2023, 02:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Ashok selvan Life History:

Ashok selvan Life History:

நடிகர் அசோக் செல்வன், ஈரோட்டை சேர்ந்தவர். ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர், தன்னுடைய தந்தையின் தொழில் முறை காரணமாக 3 வயதிலேயே இவரின் குடும்பத்தினர் சென்னைக்கு வந்து செட்டில் ஆகிவிட்டனர். சாந்தோம் மேல்நிலை பள்ளியில் ஸ்கூலிங் முடித்த இவர், பின்னர் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் விசுவல் கம்யூனிகேஷன் படித்து முடித்தார்.
 

27
Ashok selvan Searching movie Chance:

Ashok selvan Searching movie Chance:

கல்லூரியில் படித்த போது, சில குறும்படங்களை இயக்கி உள்ளது மட்டும் இன்றி, நடித்தும் உள்ளார். பின்னர் நடிப்பு தான் தன்னுடைய வாழ்க்கை என முடிவு செய்து கொண்டு, படிப்பை முடித்த உடனேயே... திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பை தேட துவங்கினார் அசோக் செல்வன். 

இதுக்கு டவல் கட்டிக்கிட்டு போஸ் கொடுத்திருக்கலாம்! எல்லை மீறிய கவர்ச்சியில்.. ஸ்ரீதேவி மகள் ஜான்வி! போட்டோஸ் !

37
Debut in soodhu kavum:

Debut in soodhu kavum:

அந்த வகையில் நீண்ட போராட்டத்திற்கு பின்னர், விஜய் சேதுபதியை வைத்து, இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கிய 'சூது கவ்வும்' படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படம் வெற்றி பெற்றதால், தன்னுடைய முதல் படத்திலேயே அசோக் செல்வன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரபலமாக மாறினார், இதை தொடர்ந்து பீசா 2 வில்லா படத்தில், ஹீரோவாக நடித்தார். இதை தொடர்ந்து அசோக் செல்வன் நடித்த, தெகிடி நல்ல வரவேற்பை பெற்றது.
 

47
Ashok selvan up coming movies:

Ashok selvan up coming movies:

தொடர்ந்து தென்னிந்திய திரையுலகில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள போராடி வரும், அசோக் செல்வன் சமீபத்தில் நடித்த ஓ மை கடவுளே, மற்றும் போர் தொழில் ஆகிய படங்கள் தரமான வெற்றியை பதிவு செய்தது. தற்போது இவர் பா ரஞ்சித் தயாரிப்பில், 'ப்ளூ ஸ்டார்', 'சபா நாயகன்', மற்றும் சொந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் உருவாகும் வெப் தொடர் ஒன்றிலும் நடிக்க உள்ளார்.

'எதிர்நீச்சல்' சீரியலில் அடுத்த இடியாக இறங்க உள்ளது யார்? மரண பீதி ரேணுகா - நந்தினி முகத்தில் ஆட்டம் போடுதே!
 

57
Ashok selvan and Keerthi pandian marriage:

Ashok selvan and Keerthi pandian marriage:

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகனான அசோக் செல்வன், ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்த போது, நடிகைகியும், பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியனை காதலிக்க துவங்கினார். இவர்களின் காதலை இரு தரப்பு பெற்றோரும், ஏற்றுக்கொண்ட நிலையில்... இவர்களின் திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருநெல்வேலியில் அருண் பாண்டியனின் சொந்த ஊரில் அமைந்துள்ள பண்ணை வீட்டில் நடந்தது.
 

67
Ashok selvan marriage Reception:

Ashok selvan marriage Reception:

இதை தொடர்ந்து இவர்களின் ரிசெப்ஷன் சென்னையில் நடந்தது அதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு, இந்த இளம் ஜோடிகளை வாழ்த்தினார்கள். இது ஒரு புறம் இருக்க, தற்போது சமூக வலைத்தளத்தில், அருண் பாண்டியன் மற்றும் அசோக் செல்வன் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் அதிகம் வெளியாகி வருகிறது.

விஜய் டிவி 'ஈரமான ரோஜாவே 2' சீரியலில் இருந்து அதிரடியாக விலகிய முக்கிய பிரபலம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
 

77
ashok selvan and arun pandian networth

ashok selvan and arun pandian networth

அதன்படி தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, அசோக் செல்வன் சொத்து மதிப்பு 10 முதல் 15 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் இவரை விட இவரின் மாமனார்... அதாவது கீர்த்தி பாண்டியனின் தந்தை அருண் பாண்டியன் பல மடங்கு வசதி படைத்தவராம். இவரின் சொத்து மதிப்பு 120 முதல் 140 வரை இருக்கும் என கூறப்படுகிறது. இப்படி பரவி வரும் தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை என்பது சந்தேகமே... அதே நேரம் அசோக் செல்வனை விட கீர்த்தி பாண்டியனின் தந்தை வசதி படைத்தவர் என்பது மட்டும் உறுதி.
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved