மதுராந்தகம் அருகே கோர விபத்து.. லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து.. டாக்டர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி!
லாரியை முந்த முயற்சி செய்த பொழுது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.
மதுராந்தகம் அருகே சென்னை நோக்கி சென்ற லாரி மீது ஆம்னி பேருந்து மற்றும் அரசு பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருச்சியிலிருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக்கொண்டு தனியார் ஆம்னி பேருந்து சென்னை நோக்கி வந்துக்கொண்டிருந்தது. பேருந்து செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள பழமத்தூர் அருகே வந்த போது விழுப்புரத்தில் இருந்து கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி முன்னாள் சென்ற லாரியை முந்த முயற்சி செய்த பொழுது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.
இதையும் படிங்க: மதுராந்தகம் அருகே பயங்கர விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு.. நடந்தது என்ன?
அப்போது பின்னால் முசிறிகளில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்தும் ஆம்னி பேருந்து மீது மோதியது. இந்த கோர விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணித்த மருத்துவர் ராஜேஷ், பிரவீன், கொடுங்கையூரை சேர்ந்த தனலட்சுமி உட்பட 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் அரசு பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதையும் படிங்க: எமன் ரூபத்தில் வந்த மாடு! ஹாலிவுட் பட பாணியில் மூன்று முறை பல்டி அடித்து மரத்தில் மோதிய கார்! 5 இளைஞர்கள் பலி!
இதனையடுத்து காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.த்தனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.