ஒரு மாதம் தான் உங்களுக்கு டைம்.! அதுக்குள்ள காலி செய்யுங்கள்.. திமுக எம்.பி.யை ஒருப்பிடி பிடித்த நீதிமன்றம்..!
மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை ஒரு மாதத்ததிற்குள் காலி செய்ய வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை கோயம்பேட்டில் திமுகநாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமிக்கு சொந்தமான வீகேர் மருத்துவமனை உள்ளது. இந்த நிலத்தில் 62.93 சதுர மீட்டர் பரப்பு நிலத்தை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டது. கிராம நத்தம் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறி, அதனை காலி செய்யும்படி 2011ம் ஆண்டு கலாநிதி வீராசாமிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதனை எதிர்த்தும் நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் கலாநிதி வீராசாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது கிராம நத்தம் நிலம் என்பது வீடில்லா ஏழை மக்களுக்கு வழங்குவதற்கானது. அந்த நிலத்தை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடியாது. மனுதாரர் எம்.பி.யாக உள்ளதாலும், அவரது தந்தை தமிழக முன்னாள் அமைச்சராக இருந்துள்ளார் என்பதாலும், அவர் நிலமற்ற ஏழை அல்ல எனக்கூறி கலாநிதியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
Kalanidhi Veerasamy
மேலும், தமிழகத்தில் சமூக நீதி பாதுகாவலர்கள் எனக் கூறும் அரசியல் கட்சிகள், மக்கள் விருப்பத்துக்கு மதிப்பளிக்க வழங்க வேண்டும். ஒரு மாதத்தில் நிலத்தை காலி செய்து ஒப்படைக்க திமுக எம்.பி. கலாநிதிக்கு உத்தரவிட்டார். காலி செய்ய தவறும் பட்சத்தில் நிலத்தை மீட்க நடவடிக்க தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.