Asianet News TamilAsianet News Tamil

மாநில அரசின் அலட்சியத்தால் பட்டாசு ஆலை மரணங்கள்: தமிழக பாஜக கண்டனம்!

பட்டாசு தொழிற்சாலை  மரணங்களுக்கு காரணம், மாநில அரசின் அலட்சியமே என தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்

TN BJP Narayanan Thirupathy condemns Firecracker factory deaths due to negligence of state govt smp
Author
First Published May 9, 2024, 6:13 PM IST

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் திருத்தங்கல்லைச் சேர்ந்த சரவணன்  என்பவருக்கு சொந்தமான சுதர்சன் என்ற பெயரில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த தனியார் பட்டாசு ஆலையில், 200க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில், மதிய உணவு இடைவேளைக்கு பிறகு வழக்கம்போல் பட்டாசு தொழிலாளர்கள் தங்களது பணியை துவங்கினர். பேன்சி ரக பட்டாசுகளை தயாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த விபத்தில் சிக்கி பெண்கள் 5 பேர், ஆண்கள் 3 பேர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இலங்கை அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியீடு!

இந்த நிலையில், பட்டாசு தொழிற்சாலை  மரணங்களுக்கு காரணம், மாநில அரசின் அலட்சியமே என தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் 5 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.  தொடரும் இந்த பட்டாசு தொழிற்சாலை  மரணங்களுக்கு காரணம், மாநில அரசின் அலட்சியமே. உரிமம் இல்லாமல் நடைபெறும் உற்பத்தி,  விதிகளை பின்பற்றாமல் அல்லது பாதுகாப்பு விதிகளை மீறி  நடைபெறும் தொழிற்சாலைகள் இயங்குவது அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் லஞ்சம், ஊழலினால் தான். ஒவ்வொரு முறையும் இது போன்ற மரணங்கள் நிகழு‌ம் போது சில லட்சங்களை இழப்பீடாக வழங்கி விட்டு அடுத்த மரணங்களை எதிர் நோக்கி காத்திருப்பது வெட்கக்கேடு.

 

 

உடனடியாக இதற்கு தீர்வு காணப்பட வேண்டும்.  சிவகாசியில் உள்ள பெரிய பட்டாசு நிறுவனங்களை ஆலோசித்து தீர்வு காண முனைய வேண்டும் தமிழக அரசு.  மேலும்,  இந்த மரணங்களுக்கு காரணமானவர்களுக்கு  கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உள்ளது.” என பதிவிட்டுள்ளார்.

அதேபோல், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், “விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி கிராமத்தில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 5 பெண்கள் உள்பட 8 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கின்றனர் என்ற செய்தி அறிந்து, மிகுந்த வேதனை அடைந்தேன். அவர்கள் குடும்பத்தினருக்கு, தமிழக பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

 

 

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோர் அனைவரும், விரைவாக நலம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அவர்களுக்கான உயர்தர சிகிச்சையை உறுதி செய்யுமாறும், அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்குமாறும் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.” என இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகள் அளிக்க உத்தரவிட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios