மதுரையில் தாய்க்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த தந்தையை 17 வயது சிறுவனே வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் உறங்கான்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த சத்யா என்ற பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த நிலையில் இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகன் உள்ளான். இதனிடையே கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக செல்லப்பாண்டி பிரிந்து வேரோடு பெண்ணுடன் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

நெல்லையில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக காவல்துறை அடக்குமுறை? தடியடியில் பலர் காயம்

சத்யா தனது 17 வயது மகனுடன் வசதித்து வந்துள்ளார். செல்லபாண்டி வேறொரு பெண்ணுடன் வசித்து வந்தாலும் அவ்வபோது, சத்யாவின் வீட்டிற்கு வந்து தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

திரும்பும் திசையெங்கும் சிதறி கிடக்கும் மனித உடல்கள்; 7 கட்டிடங்கள் தரைமட்டம் - சிவகாசியில் தொடரும் மரண ஓலம்

இதனால் ஆத்திரமடைந்த 17 வயது மகன், தன்னுடைய நண்பருடன் சேர்ந்து அதிகாலை வீட்டின் அருகே தந்தையை கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்துள்ளார். சம்பவம் குறித்து ஒத்தக்கடை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 17 வயது சிறுவனை கைது செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.