Amala Paul : டெலிவரிக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு.. ஆனாலும் அட்டகாசம் செய்யும் அமலா பால் Viral Video!
Actress Amala Paul : பிரபல நடிகை அமலா பால் மற்றும் ஜகத் தேசாய் ஆகிய இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணமான நிலையில் விரைவில் அவருக்கு குழந்தை பிறக்கவுள்ளது.
கேரளாவில் பிறந்த நடிகை அமலா பால் மலையாள மொழி திரைப்படங்கள் மூலம் கலை உலகில் அறிமுகமானார். தமிழில் அவருக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த ஒரு திரைப்படம் என்றால் அது கடந்த 2010 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில், நடிகர் விதார்த் நடித்து வெளியான "மைனா" திரைப்படம் தான்.
அந்த திரைப்படம் கொடுத்த வரவேற்பு அமலாபாலை பல முக்கிய திரைப்படங்களில் நடிக்க உதவியது என்றால் அது மிகையல்ல. தளபதி விஜய், ஆர்யா மற்றும் தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்தவர் தான் அமலாபால். கடந்த 2014 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் ஏ.எல் விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் அதற்குப் பிறகு அவர்கள் இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜயை விவாகரத்து செய்தார் நடிகை அமலா பால், அதன் பிறகு பல ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்து வந்தார். அவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் ஜெகத் தேசாயை அவர் டேட்டிங் செய்து கொண்டிருந்த காலகட்டத்திலேயே அமலாபால் கர்ப்பமுற்ற நிலையில், அவருடைய திருமணத்திற்கு பிறகு தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். இந்நிலையில் இன்னும் சில நாள்களில் அவருக்கு குழந்தை பிறக்க இருக்கின்ற நிலையில் அவர் தற்பொழுது வெளியிட்டிருக்கும் ஒரு புதிய வீடியோ பெரிய அளவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
அவர் கர்ப்பமுற்ற நாள் முதல் தன் கணவரோடு அவர் அடிக்கும் லூட்டிகளையும், தனக்காக தனது கணவர் செய்யும் அன்பான காரியங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக ஒரு பதிவிட்டு வருகிறார். இப்பொது நிறைமாத கர்ப்பிணியான அமலாபால், வயிற்றில் குழந்தையோடு மெல்லிய நடனமாடும் வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.