தீபாவளி முடிந்தும் மாஸ் காட்டும் தளபதி.. 5வது வாரத்தில் லியோ - திரையரங்குகளில் Re-Release செய்ய வாய்ப்பு! ஏன்?
Leo Movie Re-Release : தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம் தனது ஐந்தாவது வார பயணத்தை தற்பொழுது துவங்கி உள்ளது. இந்நிலையில் சில திரையரங்குகளில் அந்த திரைப்படம் ரி-ரிலீஸ் ஆக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
Director Lokesh Kanagaraj
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக தளபதி விஜய் அவர்கள் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படம் கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளியான நிலையில் தற்போது தனது ஐந்தாவது வார பயணத்தை துவங்கி உள்ளது.
Leo movie re release
ஏற்கனவே ஆயுத பூஜைக்கு வெளியான இந்த திரைப்படம், தீபாவளி திருநாளுக்கு முக்கியமான மூன்று திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில் திரையரங்குகளில் இருந்து எடுக்கப்படும் என்று கருதப்பட்டது. ஆனால் ஆயுத பூஜை முடிந்து, தீபாவளியும் முடிந்து தற்பொழுது வெற்றிகரமாக தனது ஐந்தாவது வாரத்தில் லியோ திரைப்படம் பயணித்து வருகிறது.
Leo movie 5th week
மேலும் தற்பொழுது தீபாவளிக்கு வெளியான திரைப்படங்களில் ஜிகர்தண்டா திரைப்படத்தை தவிர மற்ற திரைப்படங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லாத காரணத்தினால், பல திரையரங்குகளில் லியோ திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. தீபாவளிக்கு வெளியான திரைப்படங்கள் பெரிய அளவில் ரசிகர்களை மகிழ்விக்காத நிலையில் இது லியோ திரைப்படத்திற்கு மிகப்பெரிய ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்றே கூறலாம்.