மக்கள் செல்வன்.. மஞ்சு வாரியர்.. De-Aging பணிகள் துவங்கியாச்சு.. விடுதலை 2 - மிரட்ட வரும் வெற்றிமாறன்!
Viduthalai Part 2 : வெற்றிமாறன் இயக்கத்தில் இவ்வாண்டு வெளியான விடுதலை திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அந்த படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Vetrimaaran
கடந்த 2007 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான "பொல்லாதவன்" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் வெற்றிமாறன். அதனை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் அவர் இயக்கி வெளியான "ஆடுகளம்" திரைப்படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கியும், தயாரித்தும் வரும் வெற்றி மாறன் இயக்கத்தில் இறுதியாக கடந்த மார்ச் 31ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியிலும் அவர் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் "விடுதலை".
Soori
இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருந்தாலும், கதையின் நாயகனாக முதல் முறையாக களமிறங்கி வெற்றி கண்டார் சூரி என்று கூறினால் அது மிகையல்ல. இந்நிலையில் வெற்றிமாறன், விடுதலை படத்தின் இரண்டாம் பாகப் பணிகளை ஏற்கனவே துவங்கிவிட்டார். விடுதலை படத்தின் முதல் பாகத்திலேயே, வரவிருக்கும் இரண்டாம் பாகத்திற்கான சில காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது அனைவரும் அறிந்ததே.
Vijay sethupathi
இந்த சூழலில் 1960 ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் நடப்பது போன்ற சில காட்சிகள் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆகவே விஜய் சேதுபதி மற்றும் அவருக்கு மனைவியாக இந்த திரைப்படத்தில் நடிக்கும் மஞ்சு வாரியர் ஆகிய இருவருக்கும் De Aging டெக்னாலஜி மூலம் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது நடந்து வருவதாக கூறப்படுகிறது. மிகவும் சிரத்தை எடுத்து இந்த திரைப்படத்தை உருவாக்கி வரும் வெற்றிமாறன் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு இந்த திரைப்படத்தை வெளியிட வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.