டைட்டில் ரெடி... அடுத்தடுத்து வெளியாக உள்ள தளபதி 68 படத்தின் 3 தரமான அப்டேட்டுகள் - என்னென்ன தெரியுமா?
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 68 திரைப்படத்தின் மூன்று அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Thalapathy 68 vijay
லியோ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 68. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் விஜய்யுடன் மீனாட்சி செளத்ரி, லைலா, சினேகா என மூன்று ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ஜெயராம், பிரபுதேவா, பிரசாந்த், பிரேம்ஜி, அஜ்மல், மோகன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
venkat Prabhu, vijay
தளபதி 68 படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் சென்னையில் பூஜையோடு தொடங்கியது. இதையடுத்து இதற்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட்டில் நடிகர் விஜய், பிரபுதேவா ஆகியோர் இணைந்து ஆடிய நடன காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. பின்னர் தாய்லாந்துக்கு பறந்த படக்குழு, அங்கு அதிரடியான ஆக்ஷன் காட்சி ஒன்றை படமாக்கிவிட்டு கடந்த வாரம் சென்னை திரும்பியது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Thalapathy 68 Movie Updates
இதையடுத்து சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தளபதி 68 படத்தின் அப்டேட்டுகளுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஒரு செம்ம சர்ப்ரைஸ் வெயிட்டிங்கில் உள்ளதாம். தளபதி 68 படத்தின் மூன்று அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி வருகிற புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைக்கு தான் இந்த மூன்று அப்டேட்டுகளும் வெளிவர உள்ளதாக கூறப்படுகிறது.
Thalapathy 68 Title, First Look update
புத்தாண்டு தினத்திற்கு முந்தைய நாள் தளபதி 68 படத்தின் டைட்டில் வெளியாக உள்ளதாகவும், புத்தாண்டு தினத்தன்று தளபதி 68 பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதுமட்டுமின்றி ஏற்கனவே யுவன் சங்கர் ராஜா இசையமைத்து படமாக்கப்பட்ட தளபதி 68 படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை பொங்கல் விருந்தாக கொடுக்க தளபதி 68 டீம் காத்திருக்கிறதாம். இந்த தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... போன் சுவிட்ச் ஆஃப்... விசாரணைக்கு ஆஜராகவில்லை - நடிகர் மன்சூர் அலிகான் தலைமறைவா?