- Home
- Gallery
- கண்ணை காட்டி விட்டு எஸ்கேப் ஆன போலீஸ்... ஷண்முகத்துக்கு சுத்துப்போட்ட ரவுடிகள் - அண்ணா சீரியல் அப்டேட்
கண்ணை காட்டி விட்டு எஸ்கேப் ஆன போலீஸ்... ஷண்முகத்துக்கு சுத்துப்போட்ட ரவுடிகள் - அண்ணா சீரியல் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் திருவனந்தபுரம் பஸ் ஏறிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

anna serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் திருவனந்தபுரம் பஸ் ஏறிய நிலையில் பரணி கனவில் கண்ட பஸ் தான் இது என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
Zee Tamil anna serial
அதாவது இதை பார்த்த பரணி ஆட்டோவில் பின்தொடர்ந்து பஸ்ஸில் ஏறி விடுகிறாள், அவளது போனை ஆட்டோவில் மிஸ் செய்து விடுகிறாள், இதையடுத்து மறுபக்கம் சௌந்தரபாண்டி யாகம் நடத்தி கொண்டிருக்கு ஒரு அய்யர் மூலமாக பாக்கியத்துக்கும் இசக்கிக்கும் இந்த யாகம் எதற்காக என்பது தெரிய வருகிறது. சண்முகத்தை அழிக்க தான் இந்த யாகம் என்பதை புரிந்து கொண்டு பரணிக்கு போன் செய்ய, அவள் போன் மிஸ் ஆனதால் போனை எடுக்காமல் இருக்கிறாள்.
இதையும் படியுங்கள்... GV Prakash: ஜிவி பிரகாஷ் விவாகரத்து முடிவுக்கு காரணம் சைந்தவி அம்மா தான்! நடந்தது என்ன? வெளியான ஷாக் தகவல்!
anna serial Update
இங்கே பஸ்ஸில் ஏறிய பரணியும் போலீசும் கேப் விட்டு உட்கார்ந்திருப்பதை பார்த்து சந்தேகமடைகிறாள், அடுத்த ஸ்டாப்பில் முத்துப்பாண்டி ஏற்பாடு செய்த ஆட்கள் உள்ளே ஏற, சண்முகத்தை அழைத்து வந்த லேடி போலீஸ் இவனை தான் போடணும் என்று கண்ணை காட்டி விட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகிறாள். இதை பார்த்து பரணிக்கு சந்தேகம் அதிகமாகிறது.
ரவுடிகள் முத்துபாண்டிக்கு போன் போட்டு பஸ்ல இப்போ நிறைய பேர் இருக்காங்க, எல்லாரும் அடுத்த ஸ்டாப்ல இறங்கிடுவாங்க, அப்புறம் இவனை போடுறோம் என்று போனை வைக்க, முத்துப்பாண்டி சந்தோஷப்படுகிறான்.
anna serial Today Episode
ரவுடிகள் ஷண்முகத்திற்கு முன்னும் பின்னுமாக சுத்து போட்டு உட்காருகின்றனர். திடீரென ஒரு ரவுடி இடுப்பில் இருந்து கத்தி கீழே விழ, அதை பார்த்து விடும் பரணி ஓடி வந்து ஷண்முகம் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ள பரணியை பார்த்த ஷண்முகம் ஷாக் ஆகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... சினிமாவுக்கே டஃப் கொடுக்கும் இதயம் சீரியல்... தொடர்ந்து 3 மணிநேரம் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிப்பு- காரணம் என்ன?