5 மாதங்கள்.. 8 படங்கள்.. ரூ.1000 கோடி வசூலை எட்டிய மலையாள சினிமா..
மலையாள சினிமா ரூ.1,000 கோடியை எட்ட உதவிய 8 படங்கள் குறித்து பார்க்கலாம்.
இந்த ஆண்டு மலையாள திரையுலகிற்கு வெற்றிகரமான ஆண்டாக அமைந்துள்ளது. இதனால் தற்போது பாக்ஸ் ஆபிஸில் ரூ 1,000 கோடி நெருங்கும் விளிம்பில் உள்ளது. ஜனவரி முதல் ஏப்ரல் வரை 985 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளது. டர்போ, குருவாயூர் ஆம்பளநடையில் போன்ற படங்களின் மூலம் ரூ.1000 கோடி வசூலை தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலையாள சினிமா ரூ.1,000 கோடியை எட்ட உதவிய 8 படங்கள் குறித்து பார்க்கலாம்.
மஞ்சும்மேல் பாய்ஸ் (பிப்ரவரி 22, 2024)-
சிதம்பரம் எழுதி இயக்கிய மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, கணபதி மற்றும் பலர் நடித்துள்ளனர். இது பாக்ஸ் ஆபிஸில் ரூ 250 கோடிக்கு மேல் வசூல், தற்போது டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்வதாகவும் கூறப்படுகிறது.
ஆவேஷம் :
ஜித்து மாதவன் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் ஃபஹத் பாசில், சஜின் கோபு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ரூ 151.95 கோடி வசூலித்துள்ளது. இந்த படம் தற்போது அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது.
தி கோட் லைஃப் (மார்ச் 28, 2024) மலையாளத்தில் ஆடுஜீவிதம் என்ற பெயரில் பென்யாமின் எழுதிய ஆடுஜீவிதம் நாவலை அடிப்படையாகக் கொண்டு தி கோட் லைஃப் படத்தை ப்ளெஸ்ஸி இயக்கியுள்ளார். பிருத்விராஜ் சுகுமாரன் முதன்மை ரோலில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கே.ஆர்குல், அமலா பால் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் இதுவரை 155 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது..
பிரேமலு (பிப்ரவரி 9, 2024) கிரீஷ் ஏடி இயக்கிய பிரேமலு படத்தில் நஸ்லென், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் உலகம் முழுவதும் ரூ.136 கோடி வசூல் செய்தது. இது தற்போது Disney+Hotstar.வெளியாகி உள்ளது.
பிரம்மயுகம் : ராகுல் சதாசிவன் இயக்கிய பிரம்மயுகம், நடிகர்கள் மம்முட்டி, அர்ஜுன் அசோகன் மற்றும் பலர் நடித்த ஒரு நட்சத்திர நடிகர்களை பெருமைப்படுத்தியது. இந்திய மற்றும் வெளிநாட்டு மொத்த வசூலையும் சேர்த்து, இந்த படத்தின் மொத்த வசூல் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.58.96 கோடியாக உள்ளது.
Varshangalkku Shesham
வர்ஷங்களுக்கு ஷேஷம் (ஏப்ரல் 11, 2024)- வினீத் ஸ்ரீனிவாசன் எழுதி இயக்கிய இந்த படத்தில் பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் உலகளவில் ரூ. 81.88 கோடி வசூல் செய்துள்ளது. அதிகம் வசூல் செய்த படங்களில் இந்த படம் இடம் பிடித்துள்ளது.
அன்பேஷிப்பின் கண்டேதும் (பிப்ரவரி 9, 2024)- அறிமுக இயக்குநர் டார்வின் குரியாகோஸ் இயக்கிய இந்தப் படத்தில் டோவினோ தாமஸ், சித்திக் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் உலகம் முழுவதும் ரூ 40 கோடி வசூல் செய்தது.
ஆபிரகாம் ஓஸ்லர் (ஜனவரி 11, 2024) - மிதுன் மானுவல் தாமஸ் இயக்கிய ஆபிரகாம் ஓஸ்லர் ஜெயராம், ஜெகதீஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் சுமார் 40.53 கோடி வசூல் செய்துள்ளது.