MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சினிமா மட்டுமல்ல ஜுவல்லரி பிசினஸிலும் கொட்டும் துட்டு... மில்க் பியூட்டி தமன்னாவின் சொத்து மதிப்பு இவ்வளவா?

சினிமா மட்டுமல்ல ஜுவல்லரி பிசினஸிலும் கொட்டும் துட்டு... மில்க் பியூட்டி தமன்னாவின் சொத்து மதிப்பு இவ்வளவா?

நடிகை தமன்னா இன்று தனது 34-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு மற்றும் சம்பள விவரம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Dec 21 2023, 05:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Tamannaah Bhatia and Vijay Varma

Tamannaah Bhatia and Vijay Varma

16 வயதிலேயே சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தமன்னா. இவரை தமிழில் முதன்முதலில் நடித்த படம் கேடி. இதையடுத்து வியாபாரி படத்தில் எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த தமன்னாவுக்கு கோலிவுட்டில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது பாலாஜி சக்திவேல் இயக்கிய கல்லூரி திரைப்படம் தான். இப்படத்தில் ஹோம்லி லுக்கில் சாதுவான கல்லூரி மாணவியாக நடித்து கவனம் ஈர்த்தார் தமன்னா.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
tamannaah

tamannaah

இதையடுத்து படிப்படியாக கோலிவுட்டில் விஜய், அஜித், தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து டாப் ஹீரோயினாக உருவெடுத்தார் தமன்னா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளிலும் நடித்து பான் இந்தியா நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ரசிகர்களால் மில்க் பியூட்டி என அழைக்கப்படும் நடிகை தமன்னா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மா என்வவரை காதலித்து வருகிறார்.

36
Tamannaah Bhatia lover Vijay Varma

Tamannaah Bhatia lover Vijay Varma

இவர்கள் இருவரும் கடந்த ஜூலை மாதம் ரிலீஸ் ஆன லஸ்ட் ஸ்டோரிஸ் 2 வெப் தொடரில் ஜோடியாக நடித்திருந்தனர். இந்த வெப் தொடருக்கு முன்னர் வரை லிப்கிஸ் காட்சிகளில் நடிக்கமாட்டேன் என்கிற கண்டிஷன் போட்டிருந்த தமன்னா. இந்த வெப் தொடரில் அதையெல்லாம் தளர்த்திவிட்டு தன் காதலன் விஜய் வர்மாவுடன் படு நெருக்கமான லிப்லாக் காட்சிகளிலும் நடித்து அதிர்ச்சி கொடுத்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

46
tamannaah birthday

tamannaah birthday

அதுமட்டுமின்றி அண்மையில் தமிழில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் முதன்முறையாக ரஜினியுடன் இணைந்து நடித்த தமன்னா. அப்படத்தில் இடம்பெற்ற காவாலா பாடலுக்கு ஆடிய கவர்ச்சி நடனம் வேறலெவலில் டிரெண்ட் ஆனது. இப்படி இந்திய சினிமாவின் டிரெண்டிங் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் தமன்னா இன்று தனது 34-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.

56
Tamannaah Bhatia`salary

Tamannaah Bhatia`salary

இந்நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம். நடிகை தமன்னா தனது காதலன் விஜய் வர்மாவை விட 6 மடங்கு அதிகளவில் சொத்துக்களை வாங்கி குவித்து வைத்துள்ளார். விஜய் வர்மாவின் சொத்து மதிப்பு வெறும் 20 கோடி தான், ஆனால் நடிகை தமன்னாவின் சொத்து மதிப்போ 120 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. நடிகை தமன்னா ஒரு படத்தில் நடிக்க ரூ.5 கோடி சம்பளமாக வாங்கி வருகிறாராம். அதோடு ஐட்டம் சாங்கிற்கு நடனமாட ரூ.1 கோடி வரை வாங்கி வருகிறாராம்.

66
Tamannaah Bhatia`net worth

Tamannaah Bhatia`net worth

நடிகை தமன்னா சினிமாவை தாண்டி பிசினஸிலும் கொடி கட்டிப்பறக்கிறார். இவர் சொந்தமாக நகைக்கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். இதுதவிர விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் அவர் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். இவருக்கு மும்பையில் 80 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்ட பங்களா ஒன்றும் உள்ளது. அதன் மதிப்பு மட்டும் ரூ.16.6 கோடியாம். இதுதவிர லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட், பிஎம்டபிள்யூ 320i, மெர்சிடிஸ் பென்ஸ் GLE என ரூ.2.3 கோடி மதிப்பிலான சொகுசு கார்களும் உள்ளன.

இதையும் படியுங்கள்... ஹாட்ரிக் வெற்றியை ருசித்தாரா ஷாருக்கான்? டங்கி திரைப்படம் சூப்பரா? சுமாரா? முழு விமர்சனம் இதோ

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமன்னா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved