ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள டங்கி திரைப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், அதன் விமர்சனத்தை பார்க்கலாம்.

2023-ம் ஆண்டு மிகவும் கொண்டாடப்பட்ட நடிகர் என்றால் அது ஷாருக்கான் தான். அவர் நடிப்பில் இந்த ஆண்டு ஏற்கனவே பதான், ஜவான் என இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. அந்த இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டதோடு ரூ.1000 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது. இந்த நிலையில், அவர் நடிப்பில் இந்த ஆண்டு மூன்றாவது படமாக டங்கி இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது.

டங்கி திரைப்படத்தை பாலிவுட்டின் முன்னணி இயக்குனரான ராஜ்குமார் ஹிரானி இயக்கி உள்ளார். இப்படத்தில் ஷாருக்கான் உடன் டாப்ஸி, விக்கி கவுஷல் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், இப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ராஜ்குமார் ஹிரானிக்காக தான் படம் பார்த்தேன். ஆனால் படம் நன்றாக இல்லை. காமெடி சுத்தமாக ஒர்க் அவுட் ஆகவில்லை. மொத்தத்தில் டங்கி தனக்கு ஏமாற்றம் அளித்ததாக கூறி 5க்கு வெறும் இரண்டு மதிப்பெண் மட்டுமே கொடுப்பேன் என நெட்டின்சன் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

டங்கி படம் மிகவும் மெதுவாகவும் போர் அடிக்கும் வகையில் உள்ளது. ராஜ்குமார் ஹிரானி இயக்கியதில் மிகவும் மோசமான படம் இது. இப்படத்தில் ஷாருக்கான் ஓவராக நடித்திருக்கிறார். இப்படம் சீரியல் பார்ப்பது போல இருந்தது. இப்படத்தில் நன்றாக இருந்தது டாப்சி கேரக்டர் தான். அவர் சிறப்பாக நடித்திருந்தார் என குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

கதை சொல்வதில் சிறந்தவர் என்பதை ராஜ்குமார் ஹிரானி மீண்டும் நிரூபித்திருக்கிறார். மனதுக்கு நெருக்கமான படமாக டங்கி உள்ளது. இதில் நட்பு, காதல், காமெடி, தேசபக்தி என அனைத்தும் கலந்திருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சி வேறலெவல், நீதிமன்ற காட்சி வெறித்தனமாக இருந்தது என பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

இந்த ஆண்டு மிகவும் ஏமாற்றம் அளித்த படமாக டங்கி உள்ளது. ராஜ்குமார் ஹிரானியின் கெரியரில் மிகவும் மோசமான படம் இது. பஞ்சாப் காரராக ஷாருக்கான் நடித்துள்ளது சுத்தமாக எடுபடவில்லை. எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யவில்லை என்று விமர்சித்து இருக்கிறார்.

Scroll to load tweet…

மேற்கண்ட விமர்சனங்களை பார்க்கும்போது டங்கி திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இப்படம் பதான், ஜவானை போல் வசூலில் ரூ.1000 கோடியை எட்டுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... தயவு செஞ்சு பேசாதீங்க... அறைஞ்சிருவேன்! காதலுக்கு எதிர்ப்பு... ரவீனா பேமிலியிடம் செம்ம திட்டு வாங்கிய மணி