லோகேஷ் சொன்ன அந்த சர்ப்ரைஸ் இது தானா? தலைவர் 171.. முக்கிய வேடத்தில் களமிறங்கும் "மாவீரன்"? - வெளியான தகவல்!
Thalaivar 171 Update : : ஜெயிலர் திரைப்பட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்பொழுது பிரபல இயக்குனர் ஞானவேல் இயக்கி வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தனது 171வது திரைப்படத்திலும் அவர் நடிக்க உள்ளார்.
Rajinikanth
தமிழ் சினிமாவில் கடந்த 50 ஆண்டுகளாக முன்னணி நாயகனாக நடித்துவரும் ஒரு ஒப்பற்ற கலைஞன் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்துவரும் அவர், தற்பொழுது ஜெய் பீம் திரைப்படம் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார்.
காதலால் இதயங்களை வென்ற என் ஓமனா... ஜோதிகாவின் 'காதல் தி கோர்' படம் பார்த்து சிலாகித்து பேசிய சூர்யா
Thalaivar 171 movie
இந்த பட பணிகளை முடித்த பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது 171வது திரைப்படத்தில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைவிருக்கிறார். இந்த படத்திற்கான பணிகள் அடுத்த ஆண்டு துவங்க உள்ள நிலையில், இந்த படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் தற்பொழுது ஈடுபட்டு வருகிறார் லோகேஷ் கனகராஜ். இதை அவரே ஒரு பேட்டியில் கூறியது குறிப்பிடத்தக்கது.
Sivakarthikeyan
இந்நிலையில் அண்மையில் வெளியான தகவலின்படி பிரபல நடிகரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தீவிர ரசிகருமான சிவகார்த்திகேயன் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே லோகேஷ் அளித்த தகவலின்படி தலைவர் 171 திரைப்படத்தில் சர்ப்ரைஸ் ஆக பல நடிகர் நடிகைகள் இணையவுள்ளதாக கூறியிருந்தார்.
Lokesh Kanagaraj
அதைப்போலவே அண்மையில் லோகேஷ் கனகராஜ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் இணைந்து சந்தித்து பேசிக் கொண்டதாகவும், இருவரும் இணைந்து கிரிக்கெட் விளையாடியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆகவே தலைவர் 171 திரைப்படத்தில் நிச்சயம் சிவகார்த்திகேயன் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.