MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அட இதென்ன புது டுவிஸ்டா இருக்கு... சன் டிவி சீரியலைவிட்டு பாதியில் விலகி பிக்பாஸுக்கு ஓடிவந்த பிரபல நடிகை

அட இதென்ன புது டுவிஸ்டா இருக்கு... சன் டிவி சீரியலைவிட்டு பாதியில் விலகி பிக்பாஸுக்கு ஓடிவந்த பிரபல நடிகை

பிகபாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் வருகிற அக்டோபர் 1-ந் தேதி தொடங்க உள்ள நிலையில், அதில் சன் டிவி சீரியல் நடிகையும் புது வரவாக வந்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 22 2023, 11:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
BiggBoss 7

BiggBoss 7

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் தமிழில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த ஆறு சீசன்களின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக இருந்தவர் கமல்ஹாசன் தான். அவர் தொகுத்து வழங்கும் விதம் மக்களை வெகுவாக கவர்ந்ததால், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான ரசிகர் படை என்பது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

25
nivisha

nivisha

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் வருகிற அக்டோபர் 1-ந் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் தேர்வும் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது. கடந்த ஆறு சீசன்களைக் காட்டிலும் இந்த சீசனில் நிறைய புதுமைகளை புகுத்தி உள்ளனர். குறிப்பாக பிக்பாஸ் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் இந்த சீசனில் இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக கமல்ஹாசனே அறிவித்துவிட்டார்.

35
Actress nivisha

Actress nivisha

இந்த இரண்டு வீடு கான்செப்டை எப்படி கையாள போகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர். அதோடு இதுவரை ஆண் பிக்பாஸ் குரல் மட்டுமே வீட்டில் ஒலித்து வந்த நிலையில், இந்த சீசனில் லேடி பிக்பாஸ் குரலும் ஒலிக்கும் என கூறப்படுகிறது. இப்படி தொடங்கும் முன்பே எக்கச்சக்கமான ஆச்சர்ய தகவல்கள் வெளியாகி உள்ளதால் எப்படா இந்த சீசன் தொடங்கும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்... கெஞ்சு கூத்தாடி.. பிக்பாஸ் 7 வாய்ப்பை பெற்ற சீரியல் நடிகர்! இறுதி லிஸ்டில் யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?

45
Serial actress nivisha

Serial actress nivisha

இது ஒருபுறம் இருக்க பிக்பாஸ் போட்டியாளர்கள் லிஸ்ட்டும் தொடர்ந்து கசிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் நடிகர் அப்பாஸ், பப்லு பிரித்விராஜ், பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் குமரன், குக் வித் கோமாளி பிரபலம் ரவீனா, காக்கா முட்டை விக்னேஷ், சீரியல் நடிகர் விஷ்ணு, நடிகை ரச்சிதாவின் முன்னாள் கணவர் தினேஷ், நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர், நடிகர் சந்தோஷ் பிரதாப், நடிகை சோனியா அகர்வால் என இந்த லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கிறது.

55
nivisha enters BiggBoss 7

nivisha enters BiggBoss 7

இந்த லிஸ்ட்டில் புதிதாக இணைந்திருப்பவர் தான் சீரியல் நடிகை நிவிஷா. இன்ஸ்டாவில் மிகவும் பிரபலமான இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியலில் வில்லியாக நடித்திருந்தார். இதையடுத்து சன் டிவிக்கு தாவிய அவர் அங்கு அண்மையில் தொடங்கப்பட்ட மலர் என்கிற சீரியலில் நடித்து வந்தார். தற்போது பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்ததும் சன் டிவி சீரியலில் இருந்து பாதியில் விலகி பிக்பாஸுக்கு ஓடி வந்துவிட்டார் நிவிஷா.

இதையும் படியுங்கள்... ஜெமினி, சில்க், தேங்காய், ஜெயம் என.. படத்தின் பெயர் மற்றும் கேரக்டர் பெயரோடு அழைக்கப்படும் நடிகர்கள்!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved