அடுத்த ஒரு வாரத்திற்கு மிக கனமழை கொட்டப் போகுது.. வெதர்மேன் சொன்ன குட்நியூஸ்..

கோவை, திருப்பூர் மற்றும் தென் மாவட்டங்களில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை பெய்யும் என்று கோவை வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

coimbatore erode, south Tamilnadu will get very heavy rain for next one week says coimbaore weatherman Rya

கோடை காலம் தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக கடந்த சில நாட்களாக வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர். நாட்டின் பல மாநிலங்களில் ஏப்ரல் முதல் ஜுன் வரை வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

அதற்கேற்ப நாட்டின் பல மாநிலங்களில் தற்போது வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தை பொறுத்து அதிக வெப்பத்திற்கான மஞ்சள் எச்சரிக்கை மற்றும் சிவப்பு எச்சரிக்கைகளை இந்திய வானிலை மையம் விடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் அவ்வப்போது சில மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

கோவை மக்களை குளிர்வித்த கோடை மழை; வெப்பம் தணிந்ததால் கொண்டாட்டம்

குறிப்பாக திருப்பத்தூர், ஈரோடு, சேலம், கரூர் பரமத்தி, நாமக்கல், மதுரை, வேலூர், தருமபுரி, திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது. இதனால் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மே 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கி உள்ளது. மே 28 வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும் என்பதால் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கத்திரி வெயிலுக்கு மத்தியில் தமிழ்நாட்டின் பல இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. பொதுமக்களுக்கு கோடை வெப்பத்தில் இருந்து சற்று நிம்மதி கிடைத்துள்ளது.

இந்த சூழலில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை பெய்யும் என்று கோவை வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தென் தமிழ்நாடு, பெங்களூரு உள்ளிட்ட தென் உள் கர்நாடகம் உள்ளிட்ட கொங்கு பெல்ட் பகுதிகளில் அடுத்த 1 வாரத்தில் மிக கனமழை பெய்யும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பலத்த மழை பெய்யும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இதனிடையே குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும். திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி வெயில் தொல்லை இல்லை! தமிழகத்தில் இடி மின்னலுடன் மிக கனமழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டத்தில் தெரியுமா?

இன்று முதல் வரும் 18ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை, தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios