MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Anbe Vaa Serial: சிறப்பான சம்பவம் செய்த சன் டிவி 'அன்பே வா சீரியல்' குழு! இது தான் விஷயமா.? குவியும் வாழ்த்து!

Anbe Vaa Serial: சிறப்பான சம்பவம் செய்த சன் டிவி 'அன்பே வா சீரியல்' குழு! இது தான் விஷயமா.? குவியும் வாழ்த்து!

2020-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் 'அன்பே வா' சீரியல், 1000 எபிசோடுகளை எட்டி சாதனை படைத்துள்ளதால், இந்த மகிழ்ச்சியை சீரியல் குழு கொண்டாடி வருகிறது. 

1 Min read
manimegalai a
Published : Jan 20 2024, 06:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

2020, ஆம் ஆண்டு சன் டிவியில் நவம்பர் மாதம் துவங்க பட்ட சீரியல் 'அன்பே வா'. இந்த சீரியலில் விராட், வருண் என்கிற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார், டெல்னா டேவிஸ்  பூமிகா என்கிற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து வந்தார்.

24

திங்கள் முதல் சனி வரை இரவு 10:30 மணிக்கு மிகவும் பரபரப்பான காட்சிகளுடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. வருண் பூமிகாவை உருகி உருகி காதலித்து, திருமணம் செய்து கொள்ளும் நிலையில்... வருணின் அம்மா பூமிகாவை, வருணுடன் வாழ விடாமல் சதி செய்கிறார். மாமியாரின் மனதை வென்று வாழ்க்கையில் ஒன்று சேரும் பூமிகா... இந்த சீரியலில் இருந்து விலக முடிவு செய்த போது... ஒரேயடியாக இவரது கதாபாத்திரத்தையே தூக்கும் விதத்தில், பூமிகா கதாபாத்திரத்தையே சாகடித்து விட்டனர் சீரியல் குழுவினர்.

அயோத்தி ராமர் கோவில் திறப்பதை முன்னிட்டு.. நடிகை சுகன்யா எழுதி, இசையமைத்து பாடியுள்ள 'ஜெய் ஸ்ரீ ராம்' பாடல்!

34

தற்போது இந்த சீரியலில், பல புதிய கதாபாத்திரங்கள் இணைந்துள்ளனர். குறிப்பாக வருண் கண்மணி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டது போல் காட்டப்படுகிறது. வருணின் அம்மா மனம் மாறி மகன் - மருமகளுக்கு ஆதரவாக இருந்தாலும்... நாத்தனார் கதாபாத்திரத்தில் கொடூர வில்லியாக நடித்து வரும் மஹாலட்சுமி பிளான் போட்டு பூமிகாவை கொன்றது மட்டும் இன்றி, கண்மணியையும் வீட்டை விட்டு விரட்ட முயன்று வருகிறார்.

44

பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர்... தற்போது வெற்றிகரமாக 1000 எபிசோடுகளை எட்டியுள்ளது. இந்த மகிழ்ச்சியை சீரியல் குழுவினர் கொண்டாடி வரும் நிலையில் ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Meena Photos: இவங்களுக்கு 47 வயசுனு சொன்னா யார் நம்புவாங்கா.. டீன் ஏஜ் பெண்களுக்கு சவால் விடும் அழகில் மீனா!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved