ஷாருக்கான் பட ரிஜெக்ஷன் முதல் வாடகைத் தாய் பிரச்சனை வரை - லேடி சூப்பர் ஸ்டார் சந்தித்த சில சர்ச்சைகள்!
Controversy Around Nayanthara : சினிமா பிரபலங்களும், சர்ச்சைகளும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்று கூறினால் அது மிகையல்ல. அந்த வகையில் இன்று பிறந்தநாள் காணும் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்களும் நிறைய சர்ச்சைகளை சந்தித்துள்ளார்.
Nayanthara Religion
தனது தந்தையின் பணி நிமித்தமாக அடிக்கடி பல ஊர்களுக்கு மாறிய நயன்தாரா பிஏ பட்டம் பெற்றவர். அதனைத் தொடர்ந்து மாடலிங் துறையிலும், தொகுப்பாளினியாகவும் தனது பணியை துவங்கினார்.
மத மாற்றம்
பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த டயானா மரியம் குரியன் என்கின்ற நயன்தாரா, கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி 2011ம் ஆண்டு கிறிஸ்துவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மத மாற்றம் செய்து கொண்டார். இதுகுறித்து ஒரு பேட்டியில் பேசிய அவர், தனது சொந்த விருப்பத்திலேயே கிறிஸ்துவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியதாக அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Prabhu Deva and Nayanthara
பிரபுதேவாவுடன் திருமணம்?
பிரபல நடிகை நயன்தாரா, பிரபுதேவா இயக்கத்தில் வெளியான தளபதி விஜயின் வில்லு திரைப்படத்தில் நடித்த பிறகு பல சமயங்களில் பிரபுதேவாவுடன் இணைந்து சர்ச்சையில் சிக்கினார். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி பெரும் சர்ச்சைகளை கிளப்பியது அனைவரும் அறிந்ததே.
Simbu and Nayanthara
சிம்புவுடன் காதல்
நடிகர் சிம்புவுடன் வல்லவன் படத்தில் நடித்த நயன்தாரா சிம்புவுடன் மிகவும் நெருக்கமாக பழகி வருவதாகவும், அவருடன் காதல் வயப்பட்டு இருப்பதாகவும் கிசுகிசுக்கள் வெளியானது. மேலும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பல செய்திகள் வெளியானது.
Chennai Express
ஷாருக்கானுடன் ஒரு பாடல்
கடந்த 2013 ஆம் ஆண்டு பாலிவுட் உலகின் பாஷாவாக திகழ்ந்துவரும் ஷாருக்கான நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சென்னை எக்ஸ்பிரஸ். இந்த திரைப்படத்தில் வெளியான 1234 என்கின்ற பாட லில் ஐட்டம் பாடல் ஒன்றை ஆட நயன்தாராவை பட குழு அனுப்பியதாகவும், ஆனால் பின்னர் அவர் அதை நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.
Nayanthara Family
வாடகை தாய்
கடந்த 2022 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நயன்தாரா, வாடகை தாய் மூலம் இரு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார். ஆனால் இதில் சட்ட சிக்கல்கள் பல இருப்பதாகவும், இதனால் நயன்தாரா மீது வழக்கு தொடரப்படும் என்றும் பல சர்ச்சைகள் எழுந்தது அனைவரும் அறிந்ததே. இப்படி பல சர்ச்சைகளை கடந்து இன்று லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக நயன்தாரா திகழ்ந்து வருவது அவருடைய ரசிகர்களை பெரிதும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளது.