சிவகார்த்திகேயனின் மூன்றாவது குழந்தைக்கு பிரமாண்டமாக நடந்த பெயர் சூட்டு விழா..! வைரலாகும் புகைப்படங்கள்!
கடந்த மாதம் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மூன்றாவது குழந்தை பிறந்த நிலையில், தன்னுடைய மகனுக்கு பவன் என பெயர் சூட்டியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் இதோ...
என்ஜினீயரிங் படித்து முடித்த போதிலும், திரையுலகின் மீது இருந்த ஆர்வத்தால்... தன்னுடைய டைமிங் காமெடியை நம்பி சின்னத்திரையில் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் சிவகார்த்திகேயன்.
கை நிறைய சம்பளம் கிடைக்கும் பல வேலைகள் கிடைத்த போதும், அதெல்லாம் உதறி தள்ளிவிட்டு இவர் சினிமாவில் ஆர்வம் காட்டியது, இவருடைய குடும்பத்தினருக்கு ஆரம்பத்தில் பிடிக்கவில்லை என்றாலும், சிவகார்த்திகேயன் ஆசைக்காக ஒப்புக்கொண்டனர்.
ஸ்டாண்ட் அப் காமெடியில் தன்னை ஒரு ஸ்டராங் போட்டியாளராக நிலை நிறுத்தி காட்டிய சிவகார்த்திகேயன் உள்ளே, திறமையான தொகுப்பாளர் ஒளிந்திருப்பதை கண்டு பிடித்து அவருக்கு தொகுப்பாளராக வாய்ப்பு கொடுத்தது விஜய் டிவி.
இது சிவகார்த்திகேயனுக்கு மேலும் பிரபலத்தை தேடி தர, அப்படியே ஜோடி நம்பர் 1 டான்ஸ் நிகழ்சியில் கலந்து கொண்டு, தன்னுடைய நடன திறமையையும் வெளிப்படுத்தி டைட்டில் வின்னராக மாறினார்.
மெல்ல மெல்ல... சின்னத்திரையில் இருந்து நகர்ந்து வெள்ளித்திரை வாய்ப்பு தேட துவங்கிய சிவகார்த்திகேயனுக்கு, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய மெரினா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
காதலும், காமெடியும் கலந்து லோ பட்ஜட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தில், சிவகார்த்திகேயனின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது மட்டும் இன்றி, படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. தனுஷின் 3 படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் சிவ நடித்திருந்தாலும்... அது அவரின் ஹீரோ பிரவேசத்திற்கு பெரிதாக எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
இதை தொடர்ந்து தனக்கு செட் ஆகும் படியான காமெடி கலந்த ஹீரோ சப்ஜெட் படங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார் சிவகார்த்திகேயன். அந்த வகையில் இவர் நடித்த, கேடி பில்லா கில்லாடி ரங்கா, ரஜினி முருகன், மான் கராத்தே, ரெமோ, போன்ற படங்கள் வரிசையாக ஹிட் லிஸ்டில் இணைந்தது.
அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகர் என்கிற இடத்திற்கு முன்னேறினார். இவரின் வளர்ச்சிக்கு தடை போடும் விதமாக இவரை சில பிரச்சனைகள் சுழன்று அடிக்க துவங்கிய போதும், சில பெரிய நடிகர்களின் உதவி இவரை அதில் இருந்து மீண்டு வர உதவியது.
கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்த, அயலான் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்றாலும், அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக மாறியுள்ளது.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருந்த நிலையில், கடந்த மாதம் அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கு ஆராதனா, குகன் என இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில்... மூன்றாவதாக மகன் பிறந்த தகவலையும் கூறினார்.
கொழு கொழுன்னு அழகு பொம்மை போல் இருக்கும்... இந்த குழந்தை ஒரு முன்னணி ஹீரோயின்! யார் தெரியுமா?
இந்நிலையில் சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதியின் மூன்றாவது குழந்தைக்கு அண்மையில் பெயர் சூட்டு நிகழ்ச்சி நடந்துள்ளது. மிகவும் எளிமையாக வீட்டிலேயே நடந்த இந்த நிகழ்ச்சியில் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
இதுகுறித்த வீடியோ ஒன்றை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள சிவகார்த்திகேயன் தன்னுடைய இரண்டாவது மகனுக்கு, பவன் என பெயர் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Indian 2 Trimmed: வெட்டி வீசப்படும் இந்தியன் 2 பாகங்கள்; எவ்வளவு நிமிடங்கள் தெரியுமா? காரணம் என்ன?