- Home
- Gallery
- Indian 2 Trimmed: வெட்டி வீசப்படும் இந்தியன் 2 பாகங்கள்; எவ்வளவு நிமிடங்கள் தெரியுமா? காரணம் என்ன?
Indian 2 Trimmed: வெட்டி வீசப்படும் இந்தியன் 2 பாகங்கள்; எவ்வளவு நிமிடங்கள் தெரியுமா? காரணம் என்ன?
'இந்தியன் 2' திரைப்படம் தோல்வியடைந்ததை தொடர்ந்து, குறிப்பிட்ட பகுதிகளை வெட்டி வீச படக்குழு முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியன் படத்தின் முதல் பாக பிளாக் பஸ்டர் வெற்றியால், இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுதியாகவே இருந்த நிலையில், இப்படம் ஜூலை 12-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
Kamal Haasans Indian 2 collection report
ப்ரீ டிக்கெட் புக்கிங்கிலேயே, ரூபாய் 25 கோடி வசூலித்த 'இந்தியன் 2' முதல் நாளே 50 கோடி வசூலை வாரி குவித்தது. தமிழகத்தில் 9 மணிக்கே சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டதால், தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் கமல்ஹாசன் படத்திற்கு நிலவும் பரபரப்பு காணப்படவில்லை. ஒரு சிலர் இதற்க்கு அரசியல் பின்னணியாக கூட இருக்கலாம் என கூறினர்.
மேலும் படம் வெளியானதில் இருந்து, ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து கலவையான விமர்சனங்களையே பெற்றது. வர்ம கலையில் இதெல்லாம் கூட செய்ய முடியுமா? என்கிற ஆச்சர்யம் ஒருபுறம் இருந்தாலும்... கற்பனைக்கு அப்பாற்பட்டதாகவே இருந்தது. மேலும் இப்படத்தின் நீளமும்... தேவையற்ற காட்சிகளும் 'இந்தியன் 2' படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.
Indian 2
இந்த நிலையில் தான், இந்த படத்தை ட்ரிம் செய்ய இயக்குனர் ஷங்கர் முடிவு செய்துள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 'இந்தியன் 2' வெளியான மூன்றாவது நாளில் 20 நிமிட காட்சிகள் வெட்டப்பட்டு 3:5 நிமிட மணி நேர திரைப்படம் இப்போது.. 2 மணி 40 நிமிடம் ஒளிபரப்பப்பட வாய்ப்புள்ளதால். இதன் மூலம் படம் கூடுதல் வேகம் பிடிக்கும் என கூறப்படுகிறது.. ஏற்கனவே ஃபிளாப் லிஸ்டில் இணைந்து விட்ட இந்த படத்தை இயக்குனர் ஷங்கர் எப்படி தூக்கி நிறுத்துவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Indian 2
இந்தியன் 2 திரைப்படம் இதுவரை தமிழகத்தில் 20 கோடியும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ரூ.12 கோடி வசூல் செய்துள்ளது. அமெரிக்காவில் பிரீமியர் ஷோக்கள் மூலம் ரூ.8.34 கோடி வசூலித்துள்ளது. இரண்டாவது நாளே வசூலில் பலமாக அடிவாங்கிய இந்தியன் 2, வசூல் ரீதியாக போட்ட பட்ஜெட்டை எடுப்பது கடினக் என கூறுகிறார்கள்.
லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பேனர்களின் கீழ் தயாரிக்கப்பட்ட 'இந்தியன் 2' திரைப்படத்தில் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.