- Home
- Gallery
- கொழு கொழுன்னு அழகு பொம்மை போல் இருக்கும்... இந்த குழந்தை ஒரு முன்னணி ஹீரோயின்! யார் தெரியுமா?
கொழு கொழுன்னு அழகு பொம்மை போல் இருக்கும்... இந்த குழந்தை ஒரு முன்னணி ஹீரோயின்! யார் தெரியுமா?
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வந்துகொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமியின் குழந்தை பருவ புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் தான் தற்போது தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் இளம் ஹீரோயினாக உள்ள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. சிறு வயதில் இருந்தே நடிப்பு மீது இவருக்கு ஆர்வம் இருந்தாலும் படிப்பிலும் இவர் படு சுட்டி.
எனவே தன்னுடைய பெற்றோர் ஆசைப்பட்டபடி, MBBS படிப்பை தேர்வு செய்து படித்து அதில் பட்டம் பெற்ற பின்னர், மருத்துவராக வேலை செய்யாமல் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார். இவரின் பெற்றோரும் ஐஸ்வர்யா லட்சுமி ஆசைக்கு தடை போடாமல் ஒத்துழைப்பு கொடுத்தனர். அதன்படி கடந்த 2017-ஆம் ஆண்டு நிவின் பாலி நடித்த Njandukalude Nattil Oridavela படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
இதையடுத்து, மாயநதி, வர்தன் போன்ற படங்களில் நடித்தார். மலையாளத்தை தொடேன்ற்து கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான 'ஆக்ஷன்' படத்தில் ஹீரோயினாக நடிக்க கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி கொண்டார். இந்த படம் மோசமான தோல்வியை சந்தித்த போதிலும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
பின்னர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'ஜெகமே தந்திரம்' படத்திலும் நடித்தார். தமிழில் பேக் டூ பேக் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த போதிலும் அந்த படங்கள் படுத்து விட்டதால், மனம் தளராமல் நல்ல படங்களை தேர்வு செய்து நடிக்க முயன்றார். அந்த வகையில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தில் இவர் நடித்த பூங்குழலி கதாபாத்திரம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
Aishwarya Lekshmi
தற்போது தமிழில் பொன் ஒன்று கண்டேன் என்கிற பாத்திலும், தக் லைப் படத்திலும் நடித்து வருகிறார். மலையாளத்திலும் ஹலோ மம்மி என்கிற படத்தில் நடிக்கிறார். அதே போல் கூடுதல் கவர்ச்சி காட்டி பட வாய்ப்புகளுக்கு கொக்கி போட்டு வருகிறார்.
இந்நிலையில் இவருடைய சிறிய வயது அரிய புகைப்படம் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் பார்ப்பதற்கு கொழு கொழுவென குட்டி பொம்மை போல் இருக்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி. இன்னொரு புகைப்படத்தில் ராதையாக மாறி போஸ் கொடுக்கிறார். இந்த போட்டோஸை பார்த்து ஐஸ்வர்யா லட்சுமியா இது பல ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.