- Home
- Gallery
- பார்த்திபனின் புதிய முயற்சிக்கு முன் தோற்று போனதா? ஷங்கரின் பிரமாண்டம்! இந்தியன் 2 & டீன்ஸ் பட வசூல் நிலவரம்!
பார்த்திபனின் புதிய முயற்சிக்கு முன் தோற்று போனதா? ஷங்கரின் பிரமாண்டம்! இந்தியன் 2 & டீன்ஸ் பட வசூல் நிலவரம்!
இந்த வாரம் ஜூலை 12-ஆம் தேதியோடு வெளியான 'இந்தியன் 2' படத்திற்கு போட்டியாக, பார்த்திபன் களமிறக்கிய அவரின் 'டீன்ஸ்' திரைப்படம் 'இந்தியன் 2' படத்தை விமர்சன ரீதியாக ஷங்கரை தோக்கடித்து விட்டதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு வாரமும் 4 முதல் 5 படங்களுக்கு மிகாமல் திரையரங்கில் வெளியாகின்றன. குறிப்பாக ரஜினி, கமல், விஜய், அஜித், போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானால்... சிறு பட்ஜெட் மற்றும் கார்த்தி, தனுஷ், ஜெயம்ரவி போன்ற அடுத்த கட்டத்தில் உள்ள நடிகர்களின் படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் தயங்குவது உண்டு.
இதற்க்கு முக்கிய காரணம் திரையரங்க ஒதுக்கீடு. பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே 75 சதவீதத்திற்க்கும் மேல் திரையரங்குகள் ஒதுக்கப்படும். அடுத்த நிலையில் உள்ள நடிகர்களுக்கு மீதம் உள்ள 25 சதவீதத்தில் 20 சதவீதம் ஒதுக்கப்பட்டாலும் சிறு பட்ஜெட் படங்களுக்கு 5 சதவீதம் மட்டுமே திரையரங்குகள் கிடைக்கும். பெரிய நடிகர்களின் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பால்... இந்த சிறு பட்ஜெட் படங்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்த செல்ல படுவது போல் காணாமல் போய் விடுவதும் உண்டு.
அப்படி தான் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் 'இந்தியன் 2' படத்திற்கு முன்னர் தன்னுடைய ஸ்மால் பட்ஜெட் படமான, 'டீன்ஸ்' படத்தை களமிறக்கி... கதையின் மீது உள்ள நம்பிக்கையால் வெற்றியும் கண்டுள்ளார் இயக்குனரும், நடிகருமான, பார்த்திபன்.
.
TEENZ
டீன் ஏஜ் மாணவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம், அறிவியல் நோக்கத்தில் எடுக்கப்பட்டதா? அமானுஷ்யமா என... பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் எடுத்துள்ளார். இந்த படம், இந்தியன் 2 படம் அளவுக்கு வசூலை வாரி குவிக்க வில்லை என்றாலும், கடந்த மூன்று நாட்களில் 1.41 கோடி உலக அளவில் வசூலித்துள்ளதாம்.
அதே போல் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், உலக நாயகன் நடிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான, இந்தியன் 2 திரைப்படம், கடந்த மூன்று நாட்களில் தமிழகத்தில் சுமார் 45 கோடியும், உலக அளவில் 150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.