Panthere Brooch Cost: ஆனந்த் அம்பானி தன்னுடைய ஷர்வானியில் அணிந்திருந்த.. சிறுத்தை ப்ரூசின் விலை இத்தனை கோடியா?
ஆனந்த் அம்பானி தன்னுடைய திருமணத்திற்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் அணிந்திருந்த பச்சை நிற எமெரால்ட் கல் மீது சீட்டால் அமர்ந்திருப்பது போல் இருக்கும் ப்ரூசின் மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகி பலரையும் வியக்க வைத்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், பிரபல தொழிலதிபர் விரோன் மெர்ச்சண்டின் இரண்டாவது மகளான ராதிகா மெர்ச்சண்டிற்க்கும் ஜூலை 12ஆம் தேதி, மும்பையில் அவர்களுக்கு சொந்தமான ஜியோ வேர்ல்ட் கன்வெர்ஷன் சென்டரில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் ஒட்டுமொத்த பாலிவுட் திரை உலகமே திரண்டு வந்து கலந்து கொண்ட நிலையில், கோலிவுட் திரை உலகை சேர்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய இளைய மகளான சௌந்தர்யா குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தார். அதை போல் சூர்யா, ஜோதிகா, நடிகை தமன்னா, காஜல் அகர்வால், இயக்குனர் அட்லி, பூஜா ஹெக்டே, தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு, வெங்கடேஷ், ராம்சரண் போன்ற பலர் கலந்து கொண்டனர்.
பிரபலங்களை தாண்டி ஏராளமான கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள், ஹாலிவுட் பிரபலங்கள், இன்டர்நேஷனல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், உயர் அந்தஸ்தில் உள்ள ஏராளமான செல்வந்தர்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அம்பானி சார்பில் கோடிக்கணக்கு மதிப்புள்ள பரிசுகளும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த திருமணத்தில் அனந்த் அம்பானியின் தாயார்... நீதா அம்பானி அணிந்திருந்த உடைகள் முதல், நகைகள் வரை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அதை போல் ராதிகா மெர்ச்சண்ட் மிகவும் அரிதான பல நகைகளை அணிந்து அனைவரையும் பிரமிக்க வைத்தார். அதேபோல் தான் அனந்த் அம்பானி அணிந்திருந்த ப்ரூச் மற்றும் தலைப்பாகை போன்றவற்றில் அணிந்திருந்த நகைகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியில், ஆனந்த் அம்பானி தன்னுடைய சகோதரர் ஆகாஷ் அம்பானி பரிசாக கொடுத்த பச்சை நிற எமரால்டு கல் மீது சிறுத்தை அமர்ந்திருப்பது போல் டிசைன் செய்யப்பட்ட ப்ரூச் ஒன்றை அணிந்திருந்தார். இந்த ப்ரூசில் மொத்தம் 51 வைர கற்கள் பதிக்க பட்டிருந்தது. அதேபோல் இரண்டு மரகத கற்கள், மற்றும் ஒரே ஒரு ஒனிக்ஸ் வைரம் ஆகியவை கொண்டு 18 கேரட் தங்கத்தில் இந்த ப்ரூச்சை உருவாக்கியிருந்தனர். இந்த ப்ரூசின் சிறப்பம்சமாக பார்க்கப்பட்டது, இதில் 720 கேரட் கொண்ட ரத்தின கல் இருந்தது. அதன் மீது தான் சிறுத்தை அமர்ந்திருப்பது போல் இந்த ப்ரூச் டிசைன் செய்யப்பட்டிருந்தது.
அனைவரது கவனத்தையும் கவர்ந்த இந்த ப்ரூச்சின் விலை குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இதன் மதிப்பு 162,000 அமெரிக்க டாலராம். இந்திய மதிப்பில் இந்த ப்ரூச் 1. 3 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.