- Home
- Gallery
- Soori: வெறித்தனமான ஹீரோ மெட்டீரியலாய் மாறிய சூரி.! அடையாளம் தெரியல.. அமெரிக்காவில் இருந்தபடி ஸ்டைலிஷ் போஸ்!
Soori: வெறித்தனமான ஹீரோ மெட்டீரியலாய் மாறிய சூரி.! அடையாளம் தெரியல.. அமெரிக்காவில் இருந்தபடி ஸ்டைலிஷ் போஸ்!
நடிகர் சூரி காமெடி அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் இருந்தபடி வெளியிட்டுள்ள செம்ம ஸ்டைலிஷான போட்டோஸ் தற்போது லைக்குகளை குவித்து வருகிறது.

Soori
உண்மையான உழைப்பும், அர்ப்பணிப்பும் இருந்தால் சினிமாவில் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு பலர் உள்ளனர். அப்படிதான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையில், மதுரையில் இருந்து சென்னை வந்து, தங்க இடம் இல்லாமல், சாப்பிட உணவு இல்லாமல்.. பல நாட்கள் பட்டினியாக கிடந்தது கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து தன்னை ஒரு காமெடியனாக திரையுலகில் நிலை நிறுத்தி கொண்டவர் சூரி.
Actor Soori
வடிவேலு காமெடி ரோலுக்கு லீவு விட்டு விட்டு... லீடு ரோலில் நடிக்க துவங்கியது சூரிக்கு தான் ஜாக்பாட்டாக அமைந்தது. ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன் என தொடர்ந்து முன்னணி காமெடி நடிகர்களுடன் இணைந்து தனக்கே உண்டான பாணியில் நடித்து அசத்தினார்.
Actor Soori
இவரின் திறமைக்கு தீனி போடும் விதமாகவே இயக்குனர் வெற்றி மாறன், விடுதலை படத்தில் நடிகர் சூரியை ஹீரோவாக வைத்து இயக்க, தொடர்ந்து கதையின் நாயகனாகவே சூரியை பிரதிபலிக்கும் ரோல்ஸ் அவரை தேடி வர துவங்கியுள்ளது.
Soori
சூரியும் நான் ஹீரோ ஆகிட்டேன் என எந்த ஒரு பந்தாவும் காட்டாமல் தன்னை தேடி வரும் கதாபாத்திரங்கள் தனக்கு செட் ஆகுமா? என்பதை புரிந்து கொண்டு தேர்வு செய்கிறார். இதுவே அவரின் வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது.
Indian 2 Trimmed: வெட்டி வீசப்படும் இந்தியன் 2 பாகங்கள்; எவ்வளவு நிமிடங்கள் தெரியுமா? காரணம் என்ன?
விடுதலை படத்திற்காகவும், சமீபத்தில் வெளியான கருடன் படத்திற்காகவும் நல்ல விமர்சனங்களை பெற்ற சூரிக்கு, மேலும் ஒரு மணி மகுடமாக இருக்கும் 'கொட்டு காளி ' திரைப்படம் என அடித்து கூறுகிறார் இப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சிவகார்த்திகேயன்.
காமெடி நடிகரின் இருந்து தற்போது முழுக்க முழுக்க ஹீரோ மெட்டீரியலால் மாறியுள்ள... சூரி தற்போது அமெரிக்க சென்றுள்ளார். அங்கு லாஸ் வேகாஸில் இருந்து செம்ம ஸ்டைலிஷாக கால் மேல் கால் போட்டுகொண்டு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.