MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Shruti Haasan:ஸ்ருதி ஹாசன் பற்றி அவரே சொன்ன உண்மை; அப்படி என்ன சொன்னாங்க பாருங்க!!

Shruti Haasan:ஸ்ருதி ஹாசன் பற்றி அவரே சொன்ன உண்மை; அப்படி என்ன சொன்னாங்க பாருங்க!!

நடிகை ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் குடிக்கு அடிமையாக இருந்தேன் என கூறியுள்ள தகவல் சமூக வலைத்தளத்தில் கவனம் பெற்றுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : Dec 19 2023, 12:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தென்னிந்திய திரையுலகில், உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் என்கிற அடையாளத்துடன் காலடி எடுத்து வைத்தாலும், தன்னுடைய தனி திறமையால், எந்த ஒரு சிபாரிசும் இல்லாமல் இந்த நிலையை அடைந்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.

26

ஸ்ருதி ஹாசன் தன்னுடைய பர்சனல் வாழ்க்கை பற்றி வெளிப்படையாக மீடியாக்களில் பேசுவதை விரும்பாதவர் என்றாலும், அவரை பற்றி கேள்விகள் எழுப்பினால்... எப்போதும் திறந்த புத்தகம் போல் தொகுப்பாளரின் கேள்விக்கு பதில் சொல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதே போல், மனத்தில் படும் கருத்துக்களை வெளிப்படையாகவும் போல்டாகவும் தன்னுடைய தந்தையை போல் பேசுபவர்.

Ethirneechal: அடேங்கப்பா.. இது தான் விஷயமா? கொண்டாட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் குழுவினர்! குவியும் வாழ்த்து!

36

இந்நிலையில் சமீபத்தில் ஸ்ருதிஹாசன் கொடுத்த பேட்டி ஒன்றில்... தனக்கு இருந்த மது பழக்கம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதாவது அந்த சமயத்தில் ஸ்ருதிஹாசன் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சலின் காதலை முறித்து கொள்ளும் வரை, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக குடிபோதைக்கு அடிமையாக ஸ்ருதி, குடிப்பதற்காகவே தினமும் பார்ட்டிக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்ததாக தெரிவித்தார்.

46

 தினமும் குடித்ததால், உடல் நலம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதாகவும் அந்த பழக்கத்தை விட்டு வெளியே வர தான் பெரும்பாடுபட வேண்டியிருந்ததாகவும்,அதே போல் மது மட்டுமே குடிப்பேன் என்றும், மற்றபடி போதைக்கு வேறு எதுவும் எடுத்து கொள்ள மாட்டேன் என்றும் தெரிவித்திருந்தார்.

Baakiyalakshmi: விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் செய்த மிகப்பெரிய சாதனை! குவியும் ரசிகர்கள் வாழ்த்துக்கள்.!

56

இந்த பழக்கத்தில் இருந்து வெளியே வர, தன்னை பார்ட்டிக்கு அழைக்கும் நண்பர்களிடம் இருந்து ஒதுங்க துவங்கியதாகவும்... மெல்ல மெல்ல இந்த குடிப்பழக்கத்தில் இருந்து வெளியே வந்து கடந்த 8 வருடமாக மது குடிக்காமல் உள்ளதாக தெரிவித்துள்ளார். ஸ்ருதி ஹாசனின் மன உறுதியை கண்டு ரசிகர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர்.

66

தமிழை விட தெலுங்கு திரையுலகில் பிஸியான நடிகையாக இருக்கும் ஸ்ருதி ஹாசன், டிசம்பர் 22-ஆம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள, சலார் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெடின்ஸ் கிங்ஸ்லியை இரண்டாவது திருமணம் செய்த சங்கீதாவுக்கு இவ்வளவு பெரிய மகளா? வைரலாகும் கியூட் புகைப்படம்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கமல்ஹாசன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved