- Home
- Gallery
- Ethirneechal: அடேங்கப்பா.. இது தான் விஷயமா? கொண்டாட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் குழுவினர்! குவியும் வாழ்த்து!
Ethirneechal: அடேங்கப்பா.. இது தான் விஷயமா? கொண்டாட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் குழுவினர்! குவியும் வாழ்த்து!
எதிர்நீச்சல் சீரியல் இன்றுடன் வெற்றிகரமாக 600 எபிசோடுகளை எட்டியுள்ளதை தொடர்ந்து, சீரியல் குழுவினருக்கு ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கோலங்கள் சீரியல் இயக்குனர், திருச்செல்வம் இயக்கி வரும் 'எதிர்நீச்சல்' சீரியல் கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி துவங்கப்பட்டது. இந்த சீரியல் துவங்கி இரண்டு வருடம் ஆக உள்ள நிலையில், தற்போது இந்த சீரியல் வெற்றிகரமாக 600 எபிசோடுகளை எட்டி உள்ளது.
பொதுவாகவே சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், அதிக அளவு இல்லதரசிகள் மத்தியில் ரசிக்கப்படும். ஆனால் சமீப காலமாக வித்யாசமான கண்ணோட்டத்துடனும், கதைக்களத்துடனும் மற்ற தனியார் தொலைக்காட்சிகளிலும் விறுவிறுப்பான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருவதால், டிஆர்பி-யை தக்க வைத்துக்கொள்ள, சன் டிவியும் கடுமையாக போட்டி போட்டு வருகிறது.
அந்த வகையில் துவங்கிய சில மாதங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, மட்டுமின்றி விமர்சனங்களுக்கும் ஆளான சீரியல் தான் எதிர்நீச்சல். ஆணாதிக்கம் கொண்ட ஒரு மனிதர் பற்றியும் அவரை சுற்றி நடக்கும் விஷயங்களை பற்றியும்... அவருக்கே அவரை அடக்கி ஒடுக்க வரும் ஜனனி என்கிற நாயகியை சுற்றி நடக்கும் விஷயங்களை அடிப்படையாக கொண்டு இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கி வருகிறார்.
Ethirneechal Marimuthu
இந்த சீரியல் ஒளிபரப்பாக துவங்கிய சில நாட்களிலேயே இப்போதெல்லாம் இப்படி பட்ட மனிதர்கள் இல்லை. முற்போக்கு தன்மையுடன் சீரியலை எடுத்து வருவதாக விமர்சனங்கள் எழுந்தது. இதற்க்கு இப்படி பட்ட மனிதர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்களை பற்றிய நிஜ கதை தான் இது என்பதையும் தெரிவித்தார். பின்னர் அந்த நபர் யார்? என்கிற தகவலும் வெளியானது அனைவரும் அறிந்ததே.
இந்த சீரியலில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்துவுக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருந்தது. மேலும் இவருடைய நடிப்பு மற்றும் மேனரிசம் பல மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும் தீனி போடும் வகையில் அமைந்தது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நடிகர் மாரிமுத்து 'எதிர்நீச்சல்' சீரியல் டப்பிங் பணியில் ஈடுபட்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதை தொடர்ந்து இவர் நடித்து வந்த குணசேகரன் கதாபாத்திரத்தில், தற்போது பிரபல எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ethirneechal
இவரை தவிர லீடு ரோலில் மதுமிதா, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்ரியா இசை, கமலேஷ், விபு ராமன், சத்யபிரியா, உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், இன்றுடன் 600 எபிசோடுகளை எட்டி உள்ளது. இந்த மகிழ்ச்சியை சீரியல் குழுவினர் கொண்டாடி வரும் நிலையில், ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விரைவில் இந்த சீரியல் 1000 எபிசோடுகளை எட்ட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.