- Home
- Gallery
- Baakiyalakshmi: விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் செய்த மிகப்பெரிய சாதனை! குவியும் ரசிகர்கள் வாழ்த்துக்கள்.!
Baakiyalakshmi: விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் செய்த மிகப்பெரிய சாதனை! குவியும் ரசிகர்கள் வாழ்த்துக்கள்.!
விஜய் டிவி பாக்கிய லட்சுமி சீரியல், 1000 எபிசோடுகளை எட்டியுள்ளது. எனவே ரசிகர்கள் பலர் சீரியல் குழுவினருக்கும், நடிகர்களுக்கும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சின்னத்திரையில் குடும்ப செண்டிமெண்ட்டை மையமாக வைத்து, எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும்... குறிப்பிட்ட சீரியல்களுக்கு மட்டுமே ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைக்கிறது. அந்த வகையில், இயக்குனர்கள் சிவசேகர் மற்றும் ஐ டேவிட் ஆகியோர் இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர், நல்ல வரவேற்பை பெரும் சீரியலாக இருந்து வருகிறது.
baakiyalakshmi
இந்த சீரியலில் கே எஸ் சுசித்ரா ஷெட்டி, ரேஷ்மா பசுபுலேட்டி, சதீஷ்குமார் ஆகியோர் லீட் ரோலில் நடித்து வருகின்றனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ராஜலட்சுமி, வேலு லக்ஷ்மணன், திவ்ய கணேசன், விஜே விஷால், நேகா மேனன், ரஞ்சித், மீனா செல்லமுத்து, உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
பள்ளி படிப்பை முடித்த உடனேயே, கோபியை திருமணம் செய்து கொள்ளும் பாக்யா முழுக்க முழுக்க தன்னுடைய கணவர், குழந்தைகள், மாமியார், மாமனார், தான் உலகம் என வாழ்ந்து வரும் நிலையில்.. கோபிக்கு முன்னால் காதலியுடன் ஏற்பட்ட தொடர்பால், பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்ய முயற்சிக்கிறார். ஒரு கட்டத்தில் இந்த விஷயம் பாக்யாவுக்கு தெரிய வர, அதன் பின்னர் பாக்யா எடுக்கும் முடிவுகளும்... சொந்த காலில் நிக்க போராடிவரும் முயற்சியும்தான் இந்த சீரியலின் கதைக்களம்.
வெற்றிகரமாக தன்னுடைய பணிகளை செய்து வரும் பாக்யா, எத்தனை சோதனைகள் வந்தாலும்... அதனை தைரியமாக சந்திக்கும் விதம் தான் இந்த கதாபாத்திரத்தின் மிகப்பெரிய பலம். அதே போல் கடந்த மூன்று வருடங்களாக டாப் 10 TRP பட்டியலில் இந்த சீரியல் இடம்பிடித்து வருகிறது.
தொழில் ரீதியாக வரும் பிரச்சனைகளை பாக்கியா சமாளித்து வந்தாலும் தன்னுடைய மகன் செழியன் வாழ்க்கையை எப்படி சரி செய்யப் போகிறார், அதே போல் எழில் வாழ்க்கையை புரட்டிப் போடும் அந்த உண்மையை கூறி அவரின் வாழ்க்கையை எப்படி காப்பாற்ற போகிறார்? என்கிற மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது இந்த சீரியல் சென்றுகொண்டிருக்கிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மூன்று வருடங்களுக்கு மேல், பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில்... தற்போது 1000-ம் எபிசோடை எட்டி உள்ளது. இதை தொடர்ந்து சீரியல் குழுவினருக்கும், இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர்களுக்கும் ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.