பாண்டியன் ஸ்டோர் சீரியலை தொடர்ந்து... விஜய் டிவியின் இந்த சீரியலும் முடிவுக்கு வருகிறதா? ஷாக்கிங் தகவல்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில், ஒன்று விரைவில் முடிவடைய உள்ளதாக வெளியாகி உள்ள தகவல், ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இந்த வாரத்துடன் முடிவடைய உள்ள நிலையில் , இதனை உறுதி செய்வது போல் சீரியல் குழுவினர் கடைநாள் எடுத்து கொண்ட புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டது. டி ஆர் பி-யில், டாப் 10 பட்டியலில் இடம் பிடித்து வரும் இந்த சீரியல், 5 வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்தது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து மற்றொரு, விஜய் டிவி சீரியலும் முடிவடைய உள்ளதாகவும், இந்த சீரியலின் கிளைமாக்ஸ் காட்சி தற்போது படப்பிடிப்பு எடுத்து முடிக்கப்பட்டு விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் டிவி 'சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகைக்கு பிரமாண்டமாக நடந்து முடிந்த திருமணம்! குவியும் வாழ்த்து!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று 'தென்றல் வந்து என்னை தொடும்'. இந்த சீரியலில் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ஈரமான ரோஜாவே' பார்ட் 1 தொடரில் நாயகியாக நடித்த பவித்ரா ஜனனி கதாநாயகியாக நடித்து வருகிறார். ஹீரோவாக வினோத் பாபு நடித்து வருகிறார். இந்த சீரியல் கடந்த 2021 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நிலையில், தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் படித்து முடித்து விட்டு திருமணத்திற்காக இந்தியா வரும் நாயகி, ரவுடி ஒருவரின் திருமணத்தை நிறுத்த கோவிலில் ரவுடிசம் செய்வதை கண்டு கடிக்க... அவர் ஹீரோயினை பழிவாங்க வேண்டும் என்று, அவர் கழுத்தில் தாலி கட்டுகிறார். இதைத் தொடர்ந்து ஏற்கனவே திருமணம் நிச்சயமான ஹீரோயின், என் கழுத்தில் தாலி கட்டியவருடன் மட்டுமே வாழ்வின் என தன்னுடைய குடும்பத்தை எதிர்த்து கொண்டு வினோத் பாபு உடன் வாழ துவங்குகிறார். ஆரம்பத்தில் ஹீரோயின் அபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹீரோயினை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் பின்னர் இருவரும் ஒன்றாக சேர்ந்து, வாழ துவங்குகிறார்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
கதாநாயகி கர்ப்பமாக இருக்கும் நிலையில், சூழ்நிலை காரணமாக நாயகன் ஜெயிலுக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. பல வருடங்கள் கழித்து வெளியே வரும்போது கதாநாயகிய அபி கலெக்டராக மாறி உள்ளார். மேலும் இவருக்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. ஆனால் இதுவரை வெற்றியிடம் தனக்கு குழந்தை உள்ளதை மறைக்கும் அபி, மீண்டும் வெற்றியுடன் இணைந்து வாழ்வாரா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
இடையில் கண்மணியாக வரும் ஜூலி, அபி மற்றும் வெற்றியை சேரவிடாமல் வில்லத்தனம் செய்கிறார். பல பிரச்சனைகளை கடந்து மீண்டும் அபி - வெற்றி இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்து தங்களுடைய குழந்தைகளுடன் வாழ்வார்களா? என்கிற பயணத்தை நோக்கி செல்லும் 'தென்றல் வந்து என்னை தொடும்' சீரியல் தற்போது முடிவுக்கு வர உள்ளதாகவும், இதன் கிளைமேக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல், 'தென்றல் வந்து என்னை தொடும்' சீரியல் ரசிகர்களை அதிர்ச்சியடை வைத்துள்ளது.