விஜய் டிவி 'சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகைக்கு பிரமாண்டமாக நடந்து முடிந்த திருமணம்! குவியும் வாழ்த்து!
விஜய் டிவி சீரியலில் நடித்து வரும், நடிகை ஹர்ஷலாவுக்கும், தொழிலதிபருக்கும் மிகப்பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்த புகைப்படத்தை அவர் வெளியிட ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சன் டிவியில் சுமார் 1000 எபிசோடுகளுக்கு மேல், வெற்றிகரமாக ஓடிய.. சந்திரலேகா சீரியல் மூலம் தமிழ் சீரியல்களில் நடிக்க துவங்கியவர் ஹர்ஷலா.
ஹீரோயின் அத்தை மகளாக நடித்திருந்தார். மிகவும் பாசிட்டிவான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்த இவர், தமிழை தவிர பல கன்னட சீரியல்களில் நடித்து பிரபலமானார்.
பிருங்கதா பென்னேரி, நானு மாட்டு நானு, சுக்கி, வரஸ்தாரா, ரோபோ ஃபேமிலி, சஞ்சு மாட்டு மற்றும் காவேரி போன்ற பல கன்னட சீரியல்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இதை தொடர்ந்து தற்போது விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், சிறகடிக்க ஆசை சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்நிலையில் ஹர்ஷலாவுக்கும், தொழிலதிபர் ஒருவருக்கும் மிக பிரமாண்டமாக திருமணம் நடந்து முடித்துள்ளது. தன்னுடைய திருமண புகைப்படங்களை, ஷர்ஷலாவே சமூக வலைத்தளத்தில் வெளியிட பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அதே போல் பல பிரபலங்கள், இவருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவரின் திருமணத்திலும் சில பிரபலங்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஹர்ஷலா திருமண புகைப்படங்களை வெளியிட்டு, போட்டுள்ள பதிவில்... “என் கணவனை அறிமுகப்படுத்துகிறேன் என கேப்ஷன் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.