Actress Anandhi : வைட் ஷர்ட்.. பிளாக் பேண்ட்.. டிப் டாப் லுக்கில் வசீகரிக்கும் நடிகை ஆனந்தி - கூல் பிக்ஸ் இதோ!
Actress Anandhi : ஆந்திராவின் வாராங்களில் பிறந்து, கோலிவுட் உலகில் நல்ல பல படங்களில் நடித்து புகழ்பெற்ற சிறந்த நடிகை தான் ஆனந்தி.
Anandhi
ஆந்திராவில் பிறந்த பிரபல நடிகை ஆனந்தி, தெலுங்கு திரையுலகம் மூலம் தான் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார். தமிழில் ஈவர் நடிப்பில் வெளியான முதல் திரைப்படம் "பொறியாளன்" என்பது குறிப்பிடத்தக்கது.
Actress Ananthi
அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான "கயல்" திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுத் தந்தது. அன்று முதல் இவர் "கயல் ஆனந்தி" என்று தான் அனைவராலும் அழைக்கப்பட்டு வருகிறார். தமிழில் பல நல்ல திரைப்படங்களில் சிறந்த கதாபாத்திரம் ஏற்று இவர் நடித்திருக்கிறார்.
Ananthi Photos
தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் நல்ல கதை அம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வரும் கயல் ஆனந்தி, இறுதியாக தமிழில் இவ்வாண்டு வெளியான "வைட் ரோஸ்" என்கின்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.
Anandhi photos
திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாக சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களிலும் குழந்தை நட்சத்திரமாக கயல் ஆனந்தி பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஒளிபரப்பான "லைவ் டெலிகாஸ்ட்" என்கின்ற இணைய தொடரிலும் இவர் நடித்திருக்கிறார்.