டெல்லி அணிக்கு பயம் காட்டிய நிக்கோலஸ் பூரன், அர்ஷத் கான் – லக்னோ 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி!
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான 64ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியானது 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
Delhi Capitals vs Lucknow Super Giants, 64th Match
அருண் ஜெட்லி மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 64ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் டெல்லி கேபிடல்ஸ் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 208 ரன்கள் குவித்தது.
Delhi Capitals vs Lucknow Super Giants, 64th Match
இதில் அதிகபட்சமாக அபிஷேக் போரெல் 58 ரன்னும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 57 ரன்களும் எடுத்தனர். பின்னர் கடின இலக்கை துரத்திய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் கேஎல் ராகுல் மற்றும் குயீண்டன் டி காக் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் ராகுல் 5 ரன்களிலும், குயீண்டன் டி காக் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
Delhi Capitals vs Lucknow Super Giants, 64th Match
மார்கஷ் ஸ்டோய்னிஸ் 5 ரன்னிலும், தீபக் கூடா 0 ரன்னிலும் நடையை கட்டினர். இதன் மூலமாக லக்னோ 4.1 ஓவர்களில் 44 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இம்பேக்ட் பிளேயராக வந்த ஆயுஷ் பதோனி 6 ரன்களில் நடையை கட்டினார். 5ஆவதாக களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்துக் கொடுத்தார்.
Delhi Capitals vs Lucknow Super Giants, 64th Match
அவர் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியாமல் 27 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். குர்ணல் பாண்டியா 18 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த அர்ஷத் கான் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க டெல்லி கேபிடல்ஸ் அதிர்ச்சியானது.
Delhi Capitals vs Lucknow Super Giants, 64th Match
இதில், 25 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். ஒருபுறம் விக்கெட்டுகளும் சரிந்தாலும், சிக்ஸரும், பவுண்டரியுமாக அடித்தார். இறுதி வரை போராடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியானது 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்து 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
Delhi Capitals vs Lucknow Super Giants, 64th Match
இந்தப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியானது தோல்வி அடைந்ததன் மூலமாக 13 போட்டிகளில் 6 வெற்றி, 7 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் 7ஆவது இடத்தில் உள்ளது. எனினும், பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது. கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
Delhi Capitals vs Lucknow Super Giants, 64th Match
இதே போன்று டெல்லி கேபிடல்ஸ் அணியானது 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தலும் நெட் ரன் ரேட் அடிப்படையில் மைனஸில் உள்ளது. அதோடு புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது.
Delhi Capitals vs Lucknow Super Giants, 64th Match
இந்தப் போட்டியில் டெல்லி வெற்றி பெற்றதன் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு அமைந்துள்ளது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் 2ஆவது அணியாக 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
Delhi Capitals vs Lucknow Super Giants, 64th Match
பவுலிங்கைப் பொறுத்த வரையில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இம்பேக்ட் பிளேயராக வந்த இஷாந்த் சர்மா 4 ஓவர்கள் வீசி 34 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். கலீல் அகமது, அக்ஷர் படேல், முகேஷ் குமார், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.