Bigg Boss: ஜோவிகா யோக்கிதை இப்போ தெரியுது! மட்டு மரியாதை இல்லாத பேச்சு.! ரணகளமான பிக்பாஸ் வீடு.. புதிய புரோமோ!
பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கும் - ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கும் இடையே பிரச்சனை பற்றிக்கொண்டு எரியும் நிலையில்... தற்போது ஜோவிகா ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ளவர்களை மரியாதை இல்லாமல் பேசும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
Bigg boss season 7 Tamil:
பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கி இன்னும் இரண்டு வாரம் கூட, ஆகாத நிலையில் ஓவ்வொரு நாளும் பிரச்சனைகள் பற்றிக்கொண்டு எரிகிறது. கடந்த சீசன்களில், நாமினேஷன் பற்றி பிரபலங்கள் வாய் திறக்கவே மாட்டார்கள். ஆனால் இந்த சீசனில்... பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களை எப்படி ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்புவது என்று டார்கெட் செய்து விளையாடி வருகிறார்கள்.
Small House Contestant Doing Cooking:
குறிப்பாக பூர்ணிமா - மாயா இவர்கள் இருவருக்குமே எப்போதும் இதே பேச்சு தான். ஸ்மால் பாஸ் ஹவுஸில் இருக்கும் போட்டியாளர்கள் தான் சமையல் செய்ய வேண்டும் என்பது ரூல் என்றாலும், வீட்டை சுத்தப்படுத்தவும் , பாத்ரூம் கிளீன் பண்ணவும் இரண்டு வீட்டில் வசித்து வருபவர்களுக்கு இடையே போட்டி வைத்து தீர்மானிக்கப்படும். இந்த முறை... அந்த போட்டியில் பிக்பாஸ் வீட்டு போட்டியாளர்கள், ஸ்மால் பாஸ் போட்டியாளர்களிடம் தோற்ற நிலையில், அந்த இரண்டு வேலையும் பிக்பாஸ் வீட்டை சேர்ந்தவர்கள் தான் செய்து வருகிறார்கள்.
Always Fighting Mode:
எந்நேரமும் இரண்டு வீட்டை சேர்ந்தவர்களும் சண்டை கோழி போல் கோபத்துடனை சுற்றி திரிகின்றனர். அதே நேரம், கிடைத்த கேப்பில் எல்லை சண்டைவளைத்து கன்டென்ட் கொடுத்து விடுகிறார்கள். இவர்களில் பிரதீப், கூல் சுரேஷ், ஆகியோர் மிகவும் தந்திரமாக காய் நகர்த்தி வருவதையும் பார்க்க முடிகிறது.
Small House Contestant Strike:
முதல் புரோமோவில், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் மெனுவை ஒரு போர்டில் எழுதி வைக்க, அதைக்கண்டு கடுப்பாகும் ஸ்மால் ஹவுஸ் போட்டியாளர்கள் சமையல் செய்ய முடியாது என்று வேலை செய்ய மறுக்கின்றனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை வெடித்ததை பார்க்க முடிந்தது.
Jovitha - pradeep argument:
இந்த பிரச்சனையின் தொடர்ச்சியாக தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில், பிரதீப் மற்றும் ஜோவிகா இடையே கடுமையான வாக்குவாதம் நடக்கிறது. பிரதீப் நாங்க 6 பேர் நின்று இங்கு வேலை செய்து கொண்டிருக்கிறோம். அதில் ஏன் குறை வேற சொல்றீங்க என கூற... ஜோவிகா 3 வேலைக்கான சாப்பாடு எவ்வளவாவு கேட்டாலும் நீ செய்து கொடுக்க வேண்டும் என கூறுகிறார். இதை கேட்டு பிரதீப் அதற்காக எங்களை அடிமை போல் நடத்துவியா என கேள்வி எழுப்ப யுகேந்திரன் தன்னால் முடிந்தவரை பிரச்னையை சமாளிக்க முயல்கிறார்.
Jovika controversy speech:
நாங்க மனுஷங்க என்பதை மறந்தே போயிட்டிங்க உங்களுக்கு என்ன கவலை என தங்களின் ஆதங்கத்தை கூற, ஜோவிகா பிரதீப் மற்றும் விஷ்ணு இருவருமே தன்னை விட, வயதில் பெரியவர்கள் என்கிற மட்டு மரியாதை கூட கொடுக்காமல், ஆமாண்டா... நான் சாப்பாடை வேஸ்ட் பண்ணுகிறேன் என வைச்சிக்கோ நீ ஏன் சமைக்க மாட்டேன்னு சொல்லுற என பேசுகிறார். இந்த விவாதத்தால் பிக்பாஸ் வீடே தற்போது ரணகளமாகியுள்ளது.