கொல்றியே டி... கவர்ச்சியை வர்ணித்து கமெண்ட் போட்ட காதலனுக்கு ஸ்ருதிஹாசனின் ரிப்ளை என்ன தெரியுமா?
நடிகை ஸ்ருதி ஹாசன் கருப்பு நிற கவர்ச்சி உடையில் போட்டோக்கள் பதிவிட்டதை பார்த்து அவரது காதலன் ஷாந்தனு போட்ட கமெண்ட் வைரலாகி வருகிறது.
shruti haasan lover
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், தன் தந்தையை போலவே சினிமாவில் நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வருகிறார். தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என பல டாப் ஹீரோக்களுடன் நடித்துவிட்டார். இருப்பினும் தற்போது தமிழில் பட வாய்ப்புகள் சுத்தமாக இல்லாததால் பாலிவுட் மற்றும் டோலிவுட் பக்கம் சென்றுவிட்டார்.
shruti haasan
குறிப்பாக டோலிவுட்டில் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு அதிகளவில் மவுசு உள்ளது. அங்கு இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த இரண்டு படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் அந்த இரண்டு படங்களுமே இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஒன்றாக ரிலீஸ் ஆகின. அதில் வீரசிம்ஹா ரெட்டி என்கிற திரைப்படத்தில் பால கிருஷ்ணாவுக்கு ஜோடியாகவும், வால்டர் வீரய்யா திரைப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார் ஸ்ருதி.
இதையும் படியுங்கள்... படமோ பிளாக்பஸ்டர் ஹிட்... ஆனா ஹீரோவா நடிச்ச விஜய் சேதுபதி ஒரு ரூபா கூட சம்பளம் வாங்கல - அடடே இந்த படமா!
kamalhaasan daughter Shruti
இதையடுத்து அவர் நடிப்பில் சலார் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் நடிகர் பிரபாசுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஸ்ருதி. கே.ஜி.எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கிய இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படி நடிப்பில் பிசியாக இருக்கும் ஸ்ருதி, ஷாந்தனு ஹசாரிகா என்கிற டூடுல் கலைஞரை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் தற்போது லிவ்விங் டுகெதராக வாழ்ந்தும் வருகின்றனர்.
shruti haasan santanu interaction
இந்த நிலையில், கருப்பு நிறை கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார் ஸ்ருதி, அந்த புகைப்படத்தை பார்த்த அவரின் காதலன் ஹசாரிகா கொல்றியே டி எனக்கூறும் வகையில் கத்தி எமோஜியை பதிவிட்டு இருந்தார். இதைப்பார்த்த ஸ்ருதிஹாசன், அய்ய என சென்னை பாசையில் ரிப்ளை செய்து தன் பங்கிற்கு ஹார்டின் எமோஜியையும் பறக்க விட்டுள்ளார். காதல் ஜோடிகளின் இந்த கியூட் உரையாடல் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம்