படமோ பிளாக்பஸ்டர் ஹிட்... ஆனா ஹீரோவா நடிச்ச விஜய் சேதுபதி ஒரு ரூபா கூட சம்பளம் வாங்கல - அடடே இந்த படமா!
ஹீரோ, வில்லன் என கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கிக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்துள்ளாராம்.
vijay sethupathi
ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என எது கொடுத்தாலும் அசால்டாக நடித்து அப்ளாஸ் வாங்குபவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என பல்வேறு திரையுலகில் பிசியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது மகாராஜா என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. குரங்கு பொம்மை படத்தின் இயக்குனர் நிதிலன் இயக்கி உள்ள இப்படம் தான் நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது படமாகும்.
96 movie
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் விஜய் சேதுபதி குறித்து பலரும் அறிந்திடாத தகவல்களை பகிர்ந்துகொண்டார். லலித் குமார் விஜய் சேதுபதி நடித்த 96, துக்ளக் தர்பார், மாஸ்டர் மற்றும் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய நான்கு திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... இனி படத்துல நடிக்க முடியாதபடி தடைவிதிப்போம் பாத்துக்கோங்க! மார்க் ஆண்டனி வழக்கு; விஷாலுக்கு நீதிபதி எச்சரிக்கை
Trisha Vijay sethupathi
இதுவரை 50 படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதியின் 10 சதவீத படங்களில் தான் பணியாற்றியது பெருமையாக உள்ளது எனக்கூறிய அவர், 96 படத்திற்காக விஜய் சேதுபதி சம்பளமே வாங்காமல் நடித்ததாக கூறினார். அந்த ஒரு காரணத்தால் தான் அப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது என லலித் குமார் தெரிவித்தார். விஜய் சேதுபதி கூட நான் பணியாற்றிய நான்கு படங்களிலும் ஒரு தயாரிப்பாளராக எனக்கு லாபத்தை பெற்றுத்தந்த படங்கள் என நெகிழ்ச்சி உடன் கூறினார் லலித் குமார்.
vijay sethupathi salary
96 திரைப்படம் 2018-ம் ஆண்டு வெளியாகி அந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் படமாக இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி ஒரு மாஸ்டர் பீஸ் படத்திற்கு விஜய் சேதுபதி சம்பளமே வாங்காமல் நடித்துள்ள தகவல் தற்போது வெளியாகி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. 96 படத்தை விஜய் சேதுபதியின் நண்பர் பிரேம் குமார் தான் இயக்கி இருந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Anitha Vijayakumar: நீங்க டாக்டரா.. இல்ல ஆக்டரா? 50 வயதிலும் 25 வயசு மகளுக்கு டஃப் கொடுக்கும் அனிதா விஜயகுமார்