சினிமா படபிடிப்பிற்காக தென்காசி மாவட்டத்திற்கு வந்த நகைச்சுவை நடிகர் யோகிபாபு காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.

தமிழ் திரையுலகத்தின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான யோகி பாபு தொடர் வெற்றி படங்களை கொடுத்து வந்த நிலையில் அனைத்து கோவில்களிலும் சாமி தரிசனம் செய்து வருகிறார். நேற்றைய தினம் திருச்செந்தூர் முருகப் பெருமான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதனைத் தொடர்ந்து இன்று தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சினிமா படப்பிடிப்பிற்கு கலந்து கொள்ள வருகை தந்த நடிகர் யோகி பாபு தென்காசி மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதும், பிரசித்தி பெற்றதுமான காசி விஸ்வநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.